முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில்:பீட்டாவை தடைசெய்ய கோரி மாணவர்கள் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      திருவண்ணாமலை

பீட்டாவை வீட்டுக்கு அனுப்பி ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை திருவண்ணாமலையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் என மாணவர்கள் ஆவேசமடைந்தனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் பீட்டா அமைப்பை மத்திய அரசு தடை செய்யக்கோரியும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 5வது நாளாக நேற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒரு இன்ச் கூட நகராமல் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும். பீட்டாவை தடை செய்ய வேண்டும் என நேற்று இரவு வரை உற்சாகம் குறையாமல் ஆவேசத்துடன் தொடர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதேபோல வெம்பாக்கம், அனக்காவூர், செய்யாறு, வந்தவாசி, ஆரணி, சேத்துப்பட்டு, செங்கம், போளூர், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்றும் மாணவர்கள் இளைஞர்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்