எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் நடைபெற்றது.
வங்கி கடன்
மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 08 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்; குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 190 என மொத்தம் 198 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அரவிந்தன், தபெ செல்வராஜ் என்பவருக்கு ரூ.6000 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியினை மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, வழங்கினார்.
இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர்(சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கோ.தேன்மொழி, மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


