ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக மழைபொதுமக்கள் மகிழ்ச்சி

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      சேலம்

மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று பெய்த சாரல் மழையால் விவசாயிகள்  ஆறுதல் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு  பருவமழை சீசன் முற்றிலும் கைவிட்டு விட்டது. இதன் காரணமாக கடும் வறட்சியில்  தத்தளித்து வரும் நிலையில் மழைப்பொழிவு மட்டுமே வறட்சிக்கு தீர்வு என  மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் வெப்பசலனம் காரணமாக தற்போது பரவலாக மழை  பெய்து வருகிறது.

வெப்பம் தணிந்தது

ஈரோட்டில்  பகலிலும், இரவிலும் சாரல்மழை  பெய்தது. காய்ந்து கிடந்த பயிர்களுக்கும், வெயிலில் புழுங்கிய  மக்களுக்கும் சற்று ஆறுதலாக அமைந்துள்ளது. ஈரோட்டில் நின்று, நிதானமாக  பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்  அளவிற்கு மழை பெய்யாவிட்டாலும் இந்த மழை வாடி கிடக்கும் மஞ்சள், வாழை,  தென்னை போன்ற பயிர்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்திருப்பதாக விவசாயிகள்  தெரிவித்தனர். ஈரோட்டில் 8.3 மி.மீ மழைப்பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழையளவு  மிமீல் வருமாறுசத்தி, புங்கம்பாடி,எலந்தகுட்டைமேடு பகுதிகளில் தலா 2  மிமீகவுந்தப்பாடி, பவானிசாகர் தலா 1 மிமீ பெருந்துறை, ஓலப்பாளையம் தலா  3 மி.மீ, பவானி 1.2, சென்னிமலை 4மி.மீ, சிவகிரி 8.1 மிமீ, வெள்ளக்கோவில்  11.4, காங்கயம் 8.2, ஒரத்துப்பாளையம் 8 மி.மீ வீதம்  மழைப்பதிவாகியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்: