ஈரோட்டில் இரண்டு இடங்களில் பால் குளிர்விக்கும் நிலையம் திறப்பு

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      ஈரோடு

அந்தியூர் ஒன்றியம், சின்னதம்பிபாளையம், புதுக்காட்டு புதூரில், தலா, 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட, பால் குளிர்விக்கும் நிலையங்களின் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் கருப்பண்ணன் இயந்திரத்தை துவக்கி வைத்தார். மஞ்சாநாயக்கனூர், கொண்டையம்பாளையம், பெருமாபாளையம், காட்டூர், மூங்கில்பட்டி. அந்தியூர்காலனி, சின்னகரட்டூர், ஆகிய பகுதில் உள்ள பால் கொள்முதல் நிலையங்களில், நாள் ஒன்றுக்கு, 3,650 லிட்டர் பால், ஆவின் நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது. இவை கேன்களில் எடுத்துச் சென்று, ஈரோடு ஆவின் நிறுவனத்தில் குளிர்விக்கப்பட்டது. இனி புதியதாக தொடங்கிய நிலையங்களில், பால் குளிர்விக்கப்பட்டு, நேரடியாக லாரிகளில் சென்னை கொண்டு செல்லப்படும் என்று, அமைச்சர் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்: