கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,419 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அ.விஜயக்குமார் எம்.பி.வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      கன்னியாகுமரி
07

கன்னியாகுமரி,

 

மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயக்குமார் 1,419 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயக்குமார் கன்னியாகுமரி மாவட்டம், ராமன்புதூர் கார்மல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் 327 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கி, 8-ம் வகுப்பு பயிலும் மாணவன் சபரீஷ் என்பவர், தேசிய அளவில் 13 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டதையொட்டி, அவரை பாராட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கினார். அதனை தொடர்ந்து, வல்லன்குமாரன்விளை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 130 மாணவ, மாணவியர்களுக்கும், மைலாடி ரிங்கல் தௌபே அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 82 மாணவ, மாணவியர்களுக்கும், அழகப்பபுரம் புனித அந்தோணியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 120 மாணவ, மாணவியர்களுக்கும், எல்.எம்.எஸ். ஜேம்ஸ் டவுண் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 49 மாணவ, மாணவியர்களுக்கும், ஒற்றையால்விளை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 64 மாணவ, மாணவியர்களுக்கும், கன்னியாகுமரி புனித அந்தோணியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 172 மாணவ, மாணவியர்களுக்கும், அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 158 மாணவ, மாணவியர்களுக்கும், தென்தாமரைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 56 மாணவ, மாணவியர்களுக்கும், புத்தளம் எல்.எம்.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 150 மாணவ, மாணவியர்களுக்கும், தெங்கம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 80 மாணவ, மாணவியர்களுக்கும், மணிகட்டிபொட்டல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 31 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 1,419 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி தெரிவித்ததாவது:-

 

மறைந்து, மறையாமல் மக்கள் மனதில் இதய தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மா அவர்களின் தமிழக அரசு, ஒவ்வொரு துறையின் வாயிலாக பல்வேறு திட்டங்களை அறிவித்து, பொதுமக்கள் அத்திட்டத்தை உடனடியாக பெற, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது.

 

அதனடிப்படையில் பள்ளிக்கல்வி துறையின் மூலம், மாணவ, மாணவியர்களின் கல்விதிறன் வளர்ப்பதற்காக மடிக்கணினிகள், புத்தகப்பை, புத்தகம், இலவச பேரூந்து பயண அட்டை மற்றும் வீட்டின் அருகிலிருந்து பள்ளிக்கு செல்வதற்கு ஏதுவாக மிதிவண்டிகள் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து, மாணவ, மாணவியர்கள் வாழ்வில் சிறந்த நிலையை அடைவதற்கு வழிவகை செய்துள்ளார்கள். எனவே பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகள், ஊக்கத்தொகைகள் மற்றும் கல்வி உபகரணங்களை முழுவதுமாக பெற்று பயனடைவதோடு, வாழ்வில் சிறந்த நிலையை அடைய வேண்டும் என தெரிவித்தார்.

 

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவுத்தலைவர் எம்.சேவியர் மனோகரன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஏ.ஜஸ்டின் செல்வராஜ், அரசு வழக்கறிஞர்கள் ஞானசேகர், செல்வகுமார், என்.என்.ஸ்ரீஐயப்பன், நாஞ்சில் சந்திரன், சந்தையடி பாலகிருஷ்ணன், வேல்முருகன், ராஜரெத்தினம், இராஜாராம், கனகராஜன், மனோகரன், எஸ்.எஸ். சுப்பிரமணியன், வின்ஸ்டன், மாசானமுத்து, ஸ்டீபன், சுரேஷ், முருகேசன், என்.எம்.செல்வமுத்து, பரமேஸ்வரி, கிஷோர், முத்துசுவாமி, எழிளன், பார்த்தசாரதி, தேவசுதன், சிவபாலன், ரவி, செல்லையா, ராமச்சந்திரன், பள்ளி தலைமையாசிரியர்கள் ரெய்சல் கௌசல்யா, மெர்லின் மஞ்சுளா, முனைவர் தனீஸ்லாஸ், சி. அருளப்பன், நிர்மலா, மேரி ரோஸ்லின், ரீட்டா மேரி, ஞானசௌந்தரி, பெருமினா, கனகம், தம்பிதங்கம், இளையராஜா, வேதமணி, கன்னியாகுமரி பங்குதந்தை நசரேன், போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் ஆர்.ராஜகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: