முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத் தேர்வுகளில் 100 சதவீத மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      ஈரோடு

எஸ்.எஸ்.எல்.சி., 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும் என்று ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் நலப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அரசு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள், கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் 10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 1,000 வீதம் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் நலப் பள்ளி விடுதிகளில் தங்கி 10, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் அரசு பொதுத் தேர்வுகளில் 100-க்கு 100 மதிப்பெண் பெரும் ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் அரசின் ஊக்கத் தொகையான ரூ. 1,000 பெற்று பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்