சாதி சமய பேதமற்ற வலிமையான பாரதம் அமைக்க பாடுப்பட்ட ராமானுஜர் மற்றும் அம்பேத்காரின் பிறந்த நாள் விழா

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      காஞ்சிபுரம்

வலிமையான பாரதம் அமைக்க பாடுப்பட்ட ராமானுஜர் அவர்களின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா உலக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் சாதி சமய பேதமற்ற பாரதத்தை உண்டாக்க பாடுப்பட்ட டாக்டர் அம்பேத்காரின் 125 வது பிறந்த நாள் விழா மற்றும் குடியரசு தினவிழா ஆகியவைகளை தேசம் முழுவதும் விழாவாக கொண்டாட பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவித்திருந்தார்கள். இந்த முப்பெரும் விழாவை கொண்டாடும் விதமாக ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகில் கொடி ஏற்றி அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் ஆர்எஸ்எஸ் கோட்ட தலைவர் இராம.ஏழுமலை தலைமையில் காந்தி ரோடு மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம் வழியாக அண்ணா அரங்கம் அருகே வந்தடைந்தது. இதில் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த அணி வகுப்பில் ஆர்எஸ்எஸ் கோட்ட செயளாலர் பிரகாஷ், கேரளா தமிழ்நாடு உடல் பயிற்சி இயக்குநர் ஓ.கே. மோகன் ஆகியோர் பங்கேற்றனர். 300 க்கும் மேற்பட்ட காவலர்கள் இந்த அணி வகுப்பு ஊர்வலத்தில் பாதுகாப்பு கருதி அணி கோர்த்தவாறு வந்தனர்.

 

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்: