புட்லூர் ஊராட்சி அருள்மிகு ஸ்ரீ எட்டியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      திருவள்ளூர்
Tvallur

திருவள்ளுர் மாவட்டம் திருவள்ளுர் ஒன்றியம் புட்லூர் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ எட்டியம்மன் கோயிலில் புனராவாத்;தன நூதன ராஜகோபுர அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கோயில் விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக திருவள்ளுர் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.சந்திரசேகர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.விழா முன்னதாக விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமம்,நவகிரஹ ஹோமம்,கோ பூஜை,வாஸ்து பூஜை,தன பூஜை,தீபாராதனை,அங்குரார்ப்பணம்,ரஷாhபந்தனம்,முதல் கால யாக பூஜை நடைபெற்றது. பூர்ணாஹீதி,தீபாராதனை நடைபெற்றது இரண்டாம்; கால யாக பூஜைகள்,தீபாராதனைவிஷேச சாந்தி ஹோமம்,மூன்றாம் கால யாக பூஜை, நான்காம் கால யாக பூஜை,தீபாராதனை,நாடி சந்தானம்,ஜீவகலான்யாஸம்,உபசார பூஜை, கோபுர விமான கும்பாபிஷேகம்,ஆலய கர்ப்பகிரஹ கும்பாபிஷேகம்,தீபாராதனை நிகழ்ச்சி,கோயில் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினார்கள்.திருவள்ளுர்,சென்னை,புட்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனம்.பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.பக்தர்களுக்கு கலசங்கள்,அன்னதானம் வழங்கப்பட்டது.மஹா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை புட்லூர் முன்னாள் ஊராட்சி தலைவர் செந்தில்,இளங்கோ,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மோகனசுந்தரம்,கழக ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ எட்டியம்மனை தரிசனம் செய்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: