முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எதிரொலி: வர்த்தக ஆலோசனைக் குழுவில் இருந்து உபேர் தலைவர் விலகல்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அவரது வர்த்தக ஆலோசனை குழுவில் இருந்து உபேர் கால் டாக்ஸி நிறுவனர் டிராவிஸ் கலாநிக் விலகியுள்ளார்.

கடும் எதிர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், தீவிரவாத தடுப்பு நடவடிக்கை என்று கூறி ஈராக், சிரியா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

உபேர் கால் டாக்சி
ட்ரம்பின் வர்த்தக ஆலோசனைக் குழுவில் உபேர் கால் டாக்சி நிறுவனத்தின் தலைவர் டிராவிஸ் கலாநிக் உறுப்பினராக இருப்பதால், அமெரிக்காவில் நூற்றுக்கணக்கானவர்கள் உபேர் டாக்சி அப்ளிகேஷனை டெலிட் செய்தனர். உபேர் டாக்சி ஆப்பை டெலிட் செய்த படத்தை டுவிட்டரில் பதிவு செய்து  #DeleteUber என்ற ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்தனர்.

பங்கேற்க கோரிக்கை
பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் உபேர் டாக்சியில் ஓட்டுனர்களாகப் பணியாற்றுவதால், தங்களது போராட்டத்தில் உபேர் நிறுவனமும் பங்கேற்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

கலாநிக் விலகல்
''இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் டிரம்ப்புடன் உபேர் டாக்சி நிறுவனத்தின் தலைவர் டிராவிஸ் கலாநிக் தொடர்பு வைத்திருந்தால் உபேரை புறக்கணிப்போம்'' என அமெரிக்கர்கள் எச்சரித்தனர். அத்துடன், டிரம்பின் நடவடிக்கையைக் கண்டித்து உபேர் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பல தரப்பிடம் இருந்து டிராவிஸ் கலாநிக்கிற்கு அழுத்தம் வந்த நிலையில், ட்ரம்பின் வர்த்தக ஆலோசனைக் குழுவில் இருந்து கலாநிக் விலகியுள்ளதாக, உபேர் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.கலாநிக்கின் இந்த முடிவுக்கு, டிரம்ப் தரப்பிலிருந்து எந்த பதிலும் இதுவரை தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்