முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் கலெக்டர் மு.கருணாகரன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலி.

 

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம், செட்டிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலெக்டர் மு.கருணாகரன்,., கலந்து கொண்டு 168 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள். இவ்விழாவில் கலெக்டர் பேசியதாவது-

 

மாணவ, மாணவியர்கள் படித்து முடித்து பட்டம் பெறுவது என்பது வாழ்க்கையை தீர்மானிக்கும் முக்கிய அங்கமாகும். மாணவ, மாணவியர்கள் உயரிய எண்ணங்களை கைகொண்டால் உயர்வினை நிச்சயமாக அடையலாம். கல்வி மனிதனை பல்வேறு வகையில் பண்படுத்துகிறது. மாணவர்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் கல்லூரிகளில் பேராசிரியர்கள் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றியை ஊன்றுகோலாக கொண்டு, கோரிக்கைகளை வெல்ல முடியும். கல்வி என்பது ஏட்டுக் கல்வியுடன் நின்று விடாமல், தொழில் கல்வியாக உருவாக்கிட வேண்டும். மாணவ, மாணவியர்களுக்கு பலவிதமான குண நலன்கள் என்பது பிறப்பால் வருவது இல்லை. சமூகத்தால் உருவாகிறது. இதில் கல்வி நிறுவனங்களின் பங்கு முக்கியமான ஒன்றாகும். கல்வியுடன் பண்பாட்டையும், ஒழுக்கத்தினையும், நற்பண்புகளையும் கைகொள்ள வேண்டும். மனிதர்களை மொழி, சாதி, மதம், இனம் உள்ளிட்டவைகளை வைத்து, பிரித்து பார்க்கக் கூடாது. சில கல்வி நிறுவனங்கள் இதுபோன்றவைகளை அகற்றிட வேண்டும். பல்வேறு மூட நம்பிக்கைகளை ஒழித்து ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை, பணிகளை தூண்ட வேண்டும். சமூக சாக்காடுகளை களைந்திட நல்வழியை காட்ட வேண்டும். மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் கல்வி என்பது பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாது, பல்வேறு சமூக சேவைகளை உள்ளடக்கியது என்பதை உணர்ந்திட வேண்டும். சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். தங்களையும், பெற்றோர்களையும் வளப்படுத்துவதுடன் சார்ந்தவர்களையும், சமுதாய முன்னேற்றத்திலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பட்டம் பெறும் அனைவரும் வாழ்க்கையில் சிறந்த இலக்கினை அடைய வேண்டுமென வாழ்த்துகிறேன் என கலெக்டர் மு.கருணாகரன்,., பேசினார்கள்.

 

இவ்விழாவில், ஆங்கிலம், வணிகவியல், வணிக மேலாண்மை, கணினியியல், இயற்பியல், நுண்உயிரியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த 168 மாணவ, மாணவியர்களுக்கு கலெக்டர் மு.கருணாகரன்,., பட்டங்களை வழங்கினார்கள்.

 

இவ்விழாவில், ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வியியல் நிறுவனங்களின் நிறுவனர் மணிமாறன், செயலர் பத்மாவதி மணிமாறன், சிறப்பு அழைப்பாளர் விசாலாட்சி கருணாகரன், கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் ராமநாதன், கல்லுரி முதல்வர் செல்வின் சாமுவேல் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்