முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய அதிபர் புடின் மீது மரியாதை உள்ளது: அதிபர் டொனல்ட் ட்ரம்ப் பேட்டி

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - ரஷ்ய அதிபர் புடின் மீது மரியாதை வைத்துள்ளேன். ஐஎஸ் இயக்கத்தை அழிப்பதற்கு ரஷ்யா உதவ வேண்டும் என தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க இராக் இடையே நடந்த போர் குறித்த தனது கருத்தையும் ட்ரம்ப் இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். ஃபாக்ஸ் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்ற ட்ரம்ப் கூறியதாவது,

 "ஒருமுறை நாம் என்ன செய்திருக்கிறோம் என்று திரும்பிப் பாருங்கள். நாம் நிறைய தவறுகளை செய்திருக்கிறோம். உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நம்மைச் சுற்றி நிறைய கொலையாளிகள் உள்ளனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நம் நாடு அப்பாவி நாடா? நான் ஆரம்பம் முதலே ராக்குடனான போரை எதிர்த்து வந்தேன்" என்று கூறினார். மேலும் ரஷ்ய அதிபர் புடின் குறித்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், "ரஷ்ய அதிபர் புதின் மீது மரியாதை வைத்துள்ளேன். புதின் மட்டுமில்லாது பலர் மேல் எனக்கு நிறைய மரியாதை உள்ளது.

அதற்காக நான் அவர்களுடன் இணைந்து பயணிக்கப் போகிறேன் என்று அர்த்தம் இல்லை. ஆனால் ஐஎஸ் தீவிரவாதத்தை அழிப்பதற்கு ரஷ்யா உதவினால் உலகம் முழவதும் உள்ள இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான சண்டையாக இருக்கும்" என்றார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பலரும் ட்ரம்ப் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்