மூழ்கும் படகில் சமாஜ்வாடி இருக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      அரசியல்
Modi 2016 11 20

காஜியாபாத், மூழ்கும் படகில் சமாஜ்வாடி கட்சி உள்ளது. அகிலேஷ் யாதவ் ஆட்சியில் உத்திரப்பிரதேசம் சீரழிந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திரமோடி கடுமையாக தாக்கி பேசினார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையொட்டி காஜியாபாத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மூழ்கும் படகில் சமாஜ்வாடி:

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இளம் தலைவரான அகிலேஷ் ஆட்சி வந்ததால் மாநிலத்தில் வளர்ச்சிக்காக பாடுபடுவார். மாநிலம் வளர்ச்சி அடையும் என்று நினைத்தேன். ஆனால் கடந்த 5 ஆண்டுகால அவரின் ஆட்சியில் உத்திரப்பிரதேசம் சீரழிந்துவிட்டது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பெண்கள் தனியாக தெருவில் நடந்து செல்ல முடியவில்லை. பள்ளி மாணவிகள் பயத்தோடு கல்வி நிலையங்களுக்கு சென்று வருகிறார்கள்.

கிரிமனல்களுக்கு அடைக்கலம்:

மாநிலத்தில் கிரிமினல் குற்றங்கள் அதிகரித்துவிட்டன. கிரிமினல்களுக்கு சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் அடைக்கலமும் புகழிடமும் கொடுத்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டு காலத்தில் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கிரிமினல் குற்றங்கள் நடந்துள்ளன. இதற்கெல்லாம் வரும் தேர்தலில் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் பாடம் புகுட்டுவார்கள். மத்தியில் உள்ள எங்கள் ஆட்சி சரியா அல்லது இல்லையை என்பதை வரும் 2019-ம் ஆண்டு தெரிவிப்பார்கள். ஏழை விவசாயிகளின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. வரும் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றிபெற்றால் பறிக்கப்பட்ட ஏழைகளின் நிலங்கள் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்.

தணிக்கைக்கு மறுப்பு:

மாநிலத்தில் நடந்துள்ள வரவு செலவு கணக்குகள் குறித்து மத்திய தணிக்கைக்குழுவும் பொது கணக்குக்குழுவும் தணிக்கை செய்வது வழக்கம். கணக்கு தணிக்கைக்கு அகிலேஷ் மறுத்துவிட்டார். மாநிலத்தில் ஊழல் அதிகரித்துவிட்டது. வேலைக்காக பட்டதாரிகள் பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது நடக்கும் தேர்தலானது புதிய அரசும் புதிய முதல்வரும் வர வரவேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். அதாவது பாரதிய ஜனதாவை வெற்றிபெறச்செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: