Idhayam Matrimony

சென்னையில் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகளை வழங்கினார் துணை ஜனாதிபதி

வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2026      தமிழகம்
CPR-2026-01-02

சென்னை, ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகளை குடியரசுத் துணைத் தலைவர் வழங்கி கவுரவித்தார்.

‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். 

கன்னட எழுத்தாளர் சந்திரசேகர கம்பாராவுக்கு ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. புனைவுக்கான பிரிவில் 'டேல்ஸ் ஃபிரம் தி டான்-லிட் மெளண்ட்டெயின்ஸ்' என்ற நூலை எழுதிய சுபி தாபாவுக்கு வழங்கப்பட்டது. அ-புனைவுக்கான பிரிவில் 'ஃபாலன் சிட்டி - எ டபுள் மர்டர், பொலிடிகல் இன்சானிடி அன்ட் தில்லி டெசென்ட்' என்ற நூலை எழுதிய சுதீப் சக்ரவர்த்திக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த அறிமுக எழுத்தாளர் விருது நேகா தீட்சித் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, விருது பெறத் தேர்வான இலக்கிய படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார். சுதந்திரப் போராட்ட வீரரும், பத்திரிகைத் துறை முன்னோடியுமான மறைந்த ராம்நாத் கோயங்காவின் நினைவாக சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான விருதுகள் கடந்த 2023-ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து