செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் புகார் பெட்டி

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      விழுப்புரம்

செஞ்சி,

 

செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் காவல் நிலையம் சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்லியில் சாலை பாதுகாப்பு மற்றும் பெண்குழந்தைகள் உரிமை குறித்து விழிப்புணர்வு முகாம் புதன் அன்று நடைபெற்றது. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திலகவதி வரவேற்றார். சாலையில் நடந்து செல்லும் போதும், இரு சக்கர வாகனத்தில் செல்லும்போதும் மாணவிகள் கடை பிடிக்க வேண்டிய விதி முறைகள் குறித்து செஞ்சி போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் அப்பாண்டைராஜன் விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்தார். சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பு, பெண்குழந்தைகள் உரிமைகள் குறித்தும், பெண்களு ஏற்படும் இன்னல்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என செஞ்சி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி விளக்கி கூறினார். மேலும் பள்ளி விட்டு செல்லும் மாணவிகளுக்கு செஞ்சி நகரத்தில் உள்ளசாலைகளிலோ அல்லது செஞ்சி பஸ் நிலையத்திலோ பெண்களை கிண்டல், கேலி செய்யும் வாலிபர்கள் குறித்தும், சமூகவிரோதிகளால் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்த நினைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களது விபரம் குறித்து செஞ்சி அரசு மகளிர் பள்ளியில் மகளிர் காவல் நிலையத்தின் சார்பில் புதியதாக வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் விபரமாக எழுதி புகார் தெரிவிக்கலாம். புகார் செய்யும் மாணவிகளின் பெயர்கள் இடம்பெறவேண்டும் என அவசியம் இல்லை எனவும் பெயர் குறிப்பிட்டாலும் ரகசியம் காக்கப்படும் எனவே மாணவிகள் புகார் பெட்டியை பயன் படுத்திக்கொள்ளுமாறு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்தார். செஞ்சி கன்னிகா சாரிட்டபில் டிரஸ்ட் தலைவர் ரமேஷ்பாபு, இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்: