முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுபாளையம், தேக்கம்பட்டியில் பவானி ஆற்றுப்படுகையில் 9ஆம் ஆண்டு யானைகள் நலவாழ்வு சிறப்பு முகாம் தொடங்கியது, திருக்கோவில், மற்றும் மடத்தினைச் சேர்ந்த 30யானைகள் கலந்துகொண்டு உற்சாகம்

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுபாளையம் வட்டம் தேக்கம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் 9ஆம் ஆண்டு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தொடக்கவிழா நடைபெற்றது. இம்முகாமினை இந்துசமய அறநிலையங்கள் துறை ஆணையர் எம்.வீரசண்முகமனி  சிறப்பு முகாமினை துவக்கி வைத்து யானைகளுக்கு கரும்பு, பழங்கள் கொடுத்ததுடன் இம்முகாம் குறித்து தெரிவிக்கையில் , 

    மாண்புமிகு அம்மா அவர்களின் சீறிய திட்டங்களில் ஒன்றான யானைகள் புத்துணர்வு பெறும் விதமாக நல்வாழ்வு சிறப்பு முகாம் அமைத்து யானைகளுக்கு உடல்நலம் மனநலம் குறித்து சீராக்கிடும் விதமாக புத்துணவு பெற்றுச்செல்லும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இதே மாதம் துவக்கப்பட்டு சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்டையில் இந்த ஆண்டு இன்று யானைகளுக்கான சிறப்பு முகாம் துவங்கி 10.03.2017 வரை நடைபெறுகின்றன. இன்றைக்கு 30 திருக்கோயில்களிலிருந்து யானைகள் வரப்பெற்றுள்ளது. மேலும் 4யானைகள் வரவுள்ளன.

 

மேலும் இந்தமுகாமில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு அவல், மஞ்சள், உப்பு, பெருங்காயம், பேரிச்சைபழம், அச்சுவெள்ளம், அரிசி, கொள்ளு, பச்சைபயிறு, பசுந்தீவனம் ஆகிய சத்துள்ள சரிவிகித உணவு வகைகள், பழங்கள், கரும்பு, போன்ற உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றது. யானைகள் நோயினால் தாக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் அலுவலர்கள் அடங்கிய குழு மூலம் கண்காணிக்கப்படும். யானைகளுக்கு தேவையான மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. யானை பாகன்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் யானைகளுக்கும், யானைப்பாகன்களுக்கும் சிறப்பான மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ளும் யானைகளின் பாதுகாப்பினை கருதி சோலார் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், துல்லியமாக கண்காணிக்கும் வகையில்  சி.சி.டி.வி கேமரா, உயர் கண்காணிப்பு கோபுரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.   வனத்துறையின் மூலம் வனத்துறை அதிகாரிகள் 7 குழுக்களாக அமைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் யானைகளை பராமரிக்க யானை பாகன்களுக்கு பராமரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. யானைகளை குளிப்பாடுவதற்கான ஷவர் பாத் மேடை போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாமில் யானைகளுக்கு மருத்துவ பரிசோனை மட்டுமின்றி உடற்பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தச் சிறப்பு முகாமில் கலந்து கொள்ள இயலாத உடல் நலம் குன்றிய யானைகளுக்கு தங்கும் இடத்திலேயே இதேபோல் சிறந்த உணவு மருத்துவ சிகிச்சை, உடற்பயிற்சி வழங்கிட உத்திரவிடப்பட்டுள்ளது. இதன் நோக்கம், உடல் நலம் மட்டுமின்றி மனநலத்தினையும் சீராக்குவதேயாகும். அதேபோல் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு திரும்ப செல்லும் யானைகள் முழுமையாக புத்துணர்வு பெற்றுச் செல்லும் இப்பணிகளை வனத்துறை அலுவலர்கள் ஒருங்கினைந்து செயல்படுத்துவதுடன் பாதுகாப்புத்தன்மை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்து செயல்படுகிறது. என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ம.வீரசண்முகமனி  தெரிவித்தார்.

 

இவ்விழாவில் மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன் இ.வ.ப இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் இளம்பரிதி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் தமிழ்செல்வன்,    மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், கால்நடைத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்