முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் தனுஷின் கல்வி சான்றிதழ்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      சினிமா
Image Unavailable

மதுரை  - நடிகர் தனுஷ் யாருடைய மகன் என கண்டுபிடிப்பதற்காக, அவருடைய அங்கம், மச்ச அடையாளங்கள் குறிப்பிடப்பட்டி ருக்கும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் உட்பட அனைத்து கல்விச் சான்றிதழ் களையும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை கிளையில் மனு :
மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டி யைச் சேர்ந்த கதிரேசன்(60), இவரது மனைவி மீனாட்சி(55) ஆகியோர் நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்றும் தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் அவர் வழங்க உத்தரவிடக் கோரியும் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

தனுஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் வாதிடும்போது, “மேலூர் நீதிமன்றத்தில் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு, பள்ளி அடையாள அட்டை, புகைப்படம் இல்லாத பஸ் பாஸ், மருத்துவமனை வெளிநோயாளி சீட்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவற் றின் நகல்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த ஆவணங்களுக்கும் மகன் என உரிமை கோரி தொடரப்பட்ட வழக்குக்கும் தொடர்பு கிடையாது. இதனால் மேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

பராமரிப்பு செலவு :
மனுதாரரின் வழக்கறிஞர் டைட்டஸ் வாதிடும்போது, ‘‘மகனிடம் பராமரிப்பு செலவு கேட்டு பெற்றோர் வழக்கு தொடரும்போது, சம்பந்தப்பட்ட மகன் பெற்றோருடன் கடைசியாக வாழ்ந்த இடத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்” என்றார். “நடிகர் தனுஷின் ஆரம்பக் கல்வி முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்து சான்றிதழ்களையும், அங்கம் மற்றும் மச்ச அடையாளம் குறிப்பிடப்பட்டிருக்கும் பள்ளி மாற்றுச் சான்றிதழையும் இரு தரப்பினரும் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை பிப். 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்