முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.1.5 லட்சம் கோடி செலவு : அறிக்கையில் தகவல்

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டப்படி மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.1.5 லட்சம் கோடி செலவாகும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்புச்சுவர்
மெக்சிகோ எல்லையில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் நபர்களை தடுக்க எல்லையில் சுவர் கட்டப்படும் என புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். தனது பிரசாரத்தின் போது இக்கருத்தை வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதியாகவும் வெளியிட்டார். தற்போது அதிபரான நிலையில் சுவர் கட்டும் நடவடிக்கையில் தீவிரமாக உள்ளார். இதுகுறித்து ஒரு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் 1,250 மைல் (2000 கி.மீ.) நீளத்துக்கு இச்சுவர் அமைய உள்ளது. வருகிற 2020-ம் ஆண்டுக்குள் சுவரை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.1.5 லட்சம் கோடி
தேர்தல் பிரசாரத்தின் போது மெக்சிகோ எல்லையில் ரூ.1 லட்சம் கோடி செலவில் சுவர் கட்டப்படும் என டிரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது அந்த சுவர் கட்ட ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதை கட்டி முடிக்க 3.5 வருடங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்