"கொளஞ்சி" படத்தின் இசைவெளியீடு விழா

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      சினிமா
cinima-3

Source: provided

ஒய்ட் ஷடோஸ் புரோடக்ஷன்ஸ் சார்பாக மூடர்கூடம் நவீன் தயாரிப்பில் தனராம் சரவணன் இயக்கத்தில் உருவான "கொளஞ்சி" திரைப்படத்தின் இசை வெளியிடு சூரியன் FMல் நடைபெற்றது.

மேலும் இப்படத்தின் முன்னோட்டத்தை சமுத்திரகனி அவரின் ட்விட்டர் தளத்தில் அதே நாள் வெளியிட்டது. கொளஞ்சி படத்தில் சமுத்திரகனி, சங்கவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன் ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நசாத், ரஜின்.எம், பிச்சைகாரன் மூர்த்தி, ருஜீல் கிருஷ்ணா, நாடோடிகள் கோபால், ரேகா சுரேஷ், ஆதிரா ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் "தமிழன் டா" பாடல் சமீபத்தில் யூடுயுப் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது."கொளஞ்சி" படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தின் ஒரு பாடலை யுகபாரதியும் மற்ற பாடல்களை தயாரிப்பாளர் நவீனும் எழுதியுள்ளனர். நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - விஜயன் முனுசாமி, படத்தொகுப்பு - ஆதியப்பன் சிவாஉலகமெங்கும் "கொளஞ்சி" திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகின்றது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய முயற்சி

உலகின் மிகப்பெரிய பதிப்பக நிறுவனமான ஹார்ப்பர் கோலின்ஸ், தனது இந்திய கிளைகளில் பணியாற்றுபவர்களுக்கு, செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்காக, சம்பளத்துடன் கூடிய விடுமுறையை (ஐந்து நாட்கள்) அனுமதித்துள்ளது. மேலும், நொய்டாவில் உள்ள அலுவலகத்தில் செல்லப்பிராணிகளை அழைத்து வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

பணக்கார நகரம்

இந்தியாவிலேயே பணக்கார நகரமாக மும்பை திகழ்வதாகவும், இங்கு 46 ஆயிரம் மில்லியனர்களும், 28 பில்லியனர்களும் இருப்பது தெரிய வந்துள்ளது. இங்குள்ளோரின் மொத்த சொத்து மதிப்பு 56 லட்சம் கோடி ரூபாயாம். இதை தொடர்ந்து டெல்லி, பெங்களூரு பணக்கார நகரங்களாக உள்ளன. 7-வது இடத்தில் சென்னை உள்ளது.

வயது தடையில்லை

ஹெலன் வேன் விங்கிள் என்ற 87 வயதான மூதாட்டி, ‘பாடி விங்கிள்’ என்ற பெயரில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர்.இவர் கணக்கு தொடங்கிய மிகக் குறுகிய காலத்திலேயே இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோவர்ஸ், ட்விட்டரில் 2 லட்சத்து 20 ஆயிரம் பாலோவர்ஸும் உள்ளனர். நடிகை கர்தாஷியன் உடன் இவர் சேர்ந்து இருக்கும் போட்டோவிற்கு 88.3K லைக்குகள் கிடைத்ததாம்.

தூக்கம் கெடும்

தீவிரமான எடை பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடல் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால் அதே சமயம் உடல் மற்றும் மனம் அதிகப்படியான எடையைத் தூக்கியதால், இரவில் தூங்குவதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். மேலும் மனநிலையில் ஏற்றஇறக்கங்கள் ஏற்படும். மொத்தத்தில் ஒட்டுமொத்த உடலின் செயல்பாடும் பாதிக்கப்படும்.

புதிய எரிபொருள்

பாசியின் மூலம் விமான எரிபொருளை உருவாக்கியுள்ளனர் ஜப்பான், யூக்ளினா நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். அந்த வகை பாசியிலிருந்து தயாரிக்கப்படும் வேதியியல் கலவையை விமானத்தில் எரிபொருளாகப் பயன்படுத்த முடியுமாம். இந்த கலவை மூலம் ஆண்டுக்கு 33,000 கலோன்கள் எரிபொருள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

புதிய தொழில் நுட்பம்

ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப் போகிறார் என்பதை கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதை கணக்கிட்டு கூறுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முடிவை மருத்துவர்கள் அளிக்கும் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது 69 சதவிகிதம் துல்லியமாக இருக்கிறது. மேலும், ஒருவரின் உடலுக்குள் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க, இது உதவியாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் மூலம் நோய்களை வரும் முன்பே கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிக்க முடியும்.

சாப்பிடும் போது...

சுவாசக்குழாய் திறந்தால்தான் ஒருவரால் பேசமுடியும். நாம் பேசிக்கொண்டே சாப்பிடும்போது சுவாசக்குழாய் திறப்பதால், இதற்குள் உணவுப்பொருள் நுழையும் ஆபத்து அதிகம். அதை வெளியேற்ற நடக்கும் செயல்தான் புரையேறுதல். எனவே சாப்பிடும் போது பேசுவதை தவிர்ப்பதே நல்லது.

புதிய தொழில்நுட்பம்

தற்கொலை எண்ணம் கொண்டவர்களின் மனதை மாற்ற, பேஸ்புக், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அப்டேஷன் மிக விரைவில் வெளியாகுகிறது. பேஸ்புக்கில் உள்ள தற்கொலை தடுப்பு டூல்களை பேஸ்புக் போஸ்ட், லைவ்-ஸ்ட்ரீமிங் அம்சம், பேஸ்புக் லைவ் மற்றும் மெசஞ்சர் சேவைகளில் புகுத்த இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

அழியும் ஆபத்தில்...

இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.

முதல் ஏ.டி.எம்

50 ஆண்டுகள் ஆன, ஏடிஎம்கள் முதல் முறையாக இங்கிலாந்தில் ஜூன் 27 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. பார்க்லேஸ் வங்கி இந்த முதல் ஏடிஎம்மை அறிமுகம் செய்தது.  ஆறு இலக்க குறியீட்டை இட்டால் பணம் கிடைத்தது. இன்று உலகம் முழுதும் 3 மில்லியன் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அது எங்கு முதன்முதலாக அமைக்கப்பட்டதோ அந்த லண்டனில் சுமார் 70,000 ஏடிஎம்கள் உள்ளனவாம்.

மிகப்பெரிய தடம்

ஜூராசிக் பார்க் என்றழைக்கப்படும் வடக்கு ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பிரைஸ் பாயிண்ட் என்ற இடத்தில் சுமார் 5 அடி 9 அங்குல உயரம் கொண்ட உலகின் மிகப்பெரிய டைனோசர் காலடித் தடங்கள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை 127 முதல் 140 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாம். இதுவரை, 21 வகையான டைனோசர் காலடித் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சிறு மூளையுடைய மனிதன்

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள 2 இடங்களிலிருந்து சிறு மூளையுடைய மனித இனத்தின் படிமங்களை அகழ்வராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.  இந்த இனம் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்துள்ளது தெரிய வருகிறது. இந்தச் சிறு மூளையுடைய மனித இனம் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டன என்று அறிவியலர் நம்பி வந்தனர். ஆனால் இந்தக் குறிப்பிட்ட மனித இனம் 2,36,000 ஆண்டுகளுக்கும் 3,35,000 ஆண்டுகளுக்கும் இடையே வாழ்ந்து வந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. மனிதர்களின் நெருங்கிய சகாக்களான சிம்பன்ஸிக்கள், கொரில்லாக்களுக்கு இந்த மனித இனம் அதிக நெருக்கமுடையது. மேலும் இந்த சிறுமூளையுடைய மனித இனம் இறந்தோரை புதைக்கும் வழக்கம் உடையதாக இருந்துள்ளதும் அறிவியலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.