உத்தரப்பிரதேசத்தில் 3-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      இந்தியா
Uttarakhand polls(N)

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. 69 தொகுதிகளில் வரும் 19-ம் தேதி நடக்கிறது.

7-வது கட்ட தேர்தல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 403 சட்டசபை தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி 73 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு  நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக நேற்றுமுன்தினம் 11 மாவட்டங்கள் உள்ளடக்கிய 67 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு கட்ட தேர்தலும் பலத்த பாதுகாப்பு காரணமாக அமைதியான முறையில் நடைபெற்றது.


3-வது கட்ட தேர்தல்

இந்தநிலையில் 3-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இந்த 3-வது கட்ட தேர்தலில் 12 மாவட்டங்களில் உள்ள 69 தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக தேர்தலில் போட்டியிடும் அனைத்துக்கட்சி தலைவர்களும் மும்முரமாக தங்களுடைய  வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்கள். கான்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஈடுபட்டார். மேலும் பல தொகுதிகளுக்கு சென்று காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: