மண்டபத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
rmd 1

மண்டபம்,- எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்றதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

   தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் கழக பொதுச்செயலாளர் சின்னம்மா சசிகலாவின் நல்ஆதரவுடன் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் நகர் செயலாளர் சீமான் மரைக்காயர் தலைமையில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனி;ப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.

    இதில், நகர் செயலாளர் சீமான்மரைக்காயர் தலைமையில்   அவைதலைவர் சுப்பிரமணி,தலைமை கழகபேச்சாளர் மைதீன்,முன்னாள் நகர் செயலாளர் முகம்மது யூசுப்,மாவட்ட பிரதிநிதி சீனிகாதர் முகைதீன்,மாவட்ட மாணவரணி இணைசெயலாளர் ரவீந்திரன்,அம்மா பேரவை நகர் செயலாளர் சலீம், இளைஞரணி நகர் செயலாளர் ஜாகிர்உசேன்,மீனவரணி செயலாளர் செவத்தமரைக்காயர்,மேலவை பிரதிநிதிகள் பூபதி ரஜினிகாந்த்,களஞ்சியராஜா முகம்மது யூசுப், சதக்கா,வார்டு செயலாளர் கார்மேகம், அம்மா பேரவை கஜேந்திரன்,முரளி,நகர் செயற்குழு உறுப்பினர் பாலா,டாஸ்மாக் பிரிவு பூபதி, வேதாளை மேலவை பிரதிநிதிகள் முகைதீன் பிச்சை,இஸ்மத்நூன் மற்றும் அதிமுகவினர் திரளாக கலந்துகொண்டனர். 


இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: