முகப்பு

ராமநாதபுரம்

rmd news

ராமநாதபுரத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி கலெக்டர் நடராஜன் தலைமையில் எடுத்துக்கொண்டனர்

18.Aug 2017

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் நல்லிணக்க நாள் உறுதி மொழியினை கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் அரசு அலுவலர்கள் ...

vinayaga

விநாயகர் சதுர்த்தி சிலைகளை கரைக்கும் வழிமுறைகள் ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் அறிவிப்பு

17.Aug 2017

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அமைக்கப்படும் விநாயகர் சிலைகள் கரைக்கும் வழிமுறைகள் ...

rmd news 0

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா ஏராளமான அனைத்து மத பக்தர்கள் கலந்து கொண்டனர்

16.Aug 2017

ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் பல்லாயிரக்கணக்காக அனைத்து மத பக்தர்கள் ...

rmd news

சுதந்திரதினத்தையொட்டி கிராமசபை கூட்டம் ராமநாதபுரம் கலெக்;டர் நடராஜன் கலந்து கொண்டார்

15.Aug 2017

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திரதினத்தையொட்டி வன்னிவயல் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ...

kadal

கடலாடி அருகே மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

13.Aug 2017

கடலாடி-  கடலாடி அருகே மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.   இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி-சிக்கல்-முதுகுளத்தூர்-...

rmd news

தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பேரணி ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்

13.Aug 2017

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் டி.பிளாக் பகுதியில் உள்ள பட்டணம்காத்தான் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிட வளாகத்தில் மாவட்ட கலெக்டர் ...

rmd news

முதுகுளத்தூர் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்;டர் வழங்கினார்

9.Aug 2017

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள காக்கூரில் நடைபெற்ற மக்கள்தொடர்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ...

rmd news 1

ராமநாதபுரம் மாவட்டத்தில் கருவூலத்துறை முதன்மை செயலாளர் அதிகாரிகளுடன் ஆய்வு

8.Aug 2017

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளர் பணிப்பதிவேடுகளை கணினி மயமாக்கும் நடவடிக்கை குறித்து ...

rmd news

முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் 41ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா

7.Aug 2017

      கடலாடி-  முதுகுளத்தூர் வடக்குவாசல் செல்லியம்மன் கோவில் 41ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு  500 பக்தர்கள் ...

rms news 1

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11ஆயிரத்து 327 பேர் குரூப்-2 தேர்வு எழுதினர்

6.Aug 2017

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வினை 11 ஆயிரத்து 327 பேர் ...

rms news

ராமேசுவரம் பகுதி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 28 கிலோ கடல் அட்டை பறிமுதல்

6.Aug 2017

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிரந்த 28 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் ...

rmd news

கடலாடி ஒன்றிய அரசு பள்ளிகளில் கலெக்டர் முனைவர் நடராஜன் திடீர் ஆய்வு

4.Aug 2017

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் ஆய்வு ...

rms news

ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித்திருவிழா: சுவாமி அம்பாள் தங்க கேடயத்தில் மண்டகப்படிக்கு எழுந்தருளி வீதியுலா

3.Aug 2017

ராமேசுவரம்,-   ராமேசுவரம் திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஆடித்திருவிழாவை முன்னிட்டு விருந்து வைபவம் நிகழ்ச்சிக்கு ...

rmd news

எலைட் சிறப்பு பயிற்சியில் பயின்று பொறியியல் கல்லூரியில் சேர்ந்தவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

1.Aug 2017

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் எலைட் சிறப்ப பயிற்சியில் பயின்று பொறியியல் கல்லூhயில் சேர்ந்துள்ள மாணவர்களை கலெக்டர் ...

rmd news

ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்; கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது

31.Jul 2017

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ...

abdul

அப்துல்கலாம் சாதி, மதம், இனம், மொழி அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்: அப்துல்கலாம் பேரன் சலீம் சிறப்பு பேட்டி.

30.Jul 2017

 ராமேசுவரம், : ராமேசுவரம் அருகே இந்திய குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த  அப்துல்கலாம் தேசிய நினைவுடத்தில் புதியதாக ...

thiruvadanai

திருவாடானை பகுதிகளில் பயிற்காப்பீட்டு தொகை கிடைக்கும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பேச்சு

30.Jul 2017

   திருவாடானை -     திருவாடானை பகுதிகளில் மங்கலக்குடி பிர்காவில் பயிற்காப்பீடு கிடைக்காத நிலையில் விவசாயிகள் கடும் ...

rmd news

மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.8 கோடி கடன் உதவிகள் ராமநாதபுரத்தில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்

28.Jul 2017

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.8 கோடி கடன் உதவிகளை ...

temple1  2

ராமேசுவரம் திருக்கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் தேரில் வலம்:

25.Jul 2017

ராமேசுவரம்,ஆக,25: ராமேசுவரம் திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஆடித்திருவிழாவையொட்டி பர்வதவர்த்தினி அம்மன்  நான்கு ரத வீதியில் ...

rms 5

ராமநாதபுரம் அருகே லாரியில் வந்த 2 டன் செம்மரகட்டைகள் பறிமுதல்-டிரைவர் கைது

24.Jul 2017

ராமநாதபுரம்,ராமநாதபுரம் அருகே ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள 2 டன் எடையுள்ள செம்மரகட்டைகள் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய காகிதம்

அச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக் காகிதம் உருவாக்க‌ப்பட்டிருக்கிறது. அந்த துகள்களை அச்சிடும் மையில் கலந்து அச்சிட வேண்டும். அச்சிடப்பட்டு 5 நாட்களில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்திலிருந்து மறையத் துவங்கும். காற்றிலுள்ள ஆக்ஸிஜன் துகள்கள் மையிலுள்ள எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும், இதனால் எழுத்துக்கள் காகிதத்திலிருந்து மறையும். மேலும் காகிதத்தை சூடாக்கும் போது, இந்த செயல்முறையை சில நிமிடங்களில் வேகப்படுத்துவதன் மூலம் காகிதத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

காற்றில் இருந்து

சிலியில் இயங்கும் ஒரு நிறுவனம், காற்றில் இருந்து குடிநீரை உருவாக்கும் இயந்திரத்தைத் தயாரித்துள்ளது. பிரஷ் வாட்டர் எனப் பெயிடப்பட்டிருக்கும் இந்த இயந்திரம், ஈரப்பதமான காற்றை குளிர்வித்து வடிகட்டி குடிநீராக மாற்றுகிறது. இந்த கருவி பாலைவனங்களில், மலைப் பகுதிகளில் பேருதவியாக இருக்குமாம்.

அழியும் ஆபத்தில்...

இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.

புதுமையான வழியில்...

மிச்சிகன் மாநில ஆய்வாளர்கள் கோப்பிரவைடு மெட்டலிடிரன்ஸ் என்றழைக்கப்படும் பாக்டீரியாவில் இருந்து தங்கம் வெளிவருவதை  கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாக்டீரியா தங்கம் உருவாகத் தேவைப்படும். கோல்டு குளோரைடு எனும் ரசாயன பொருட்களை விழுங்கி தங்கத்தை உமிழ்வதாக கண்டறிந்துள்ளனர்.

இப்படியும் ஒரு பெண்

சுமாரம் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ள மலேசிய கோடீசுவரர்  கோ கே பெங்கின் ஒரே மகளான ஏஞ்சலின் பிரான்சிஸ் கோ, தனது காதலுக்காக கோடிக்கணக்கான சொத்தை தியாகம் செய்து தனது காதலரை கைபிடித்து உள்ளார். இவரது காதலர் ஜடிடிஹா சாதரண தரவு விஞ்ஞானி (டேட்டா சைன்டிஸ்ட்) என்பதால் அவரது தந்தை ஏற்கவில்லை.

உடனடி தேடல்

கூகுள் நிறுவனம் இன்ஸ்டண்ட் சர்ச் வசதியை கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மொபைல்களில் தேடலை விரைவாக வழங்குவதற்காகவே இன்ஸ்டண்ட் சர்ச் அறிமுகம் செய்யப்பட்டது. பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இன்ஸ்டண்ட் சர்ச்-ஐ கூகுள் தற்போது நீக்கியுள்ளது.

மைக்ரோசிப்

அமெரிக்காவில் ஒரு நிறுவனம் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடலில் ஒரு ஊழியருக்கு 300 டாலர் செலவு செய்து மைக்ரோ சிப்களை பொருத்தியுள்ளது. இந்த சிப் அக்சஸ் கார்டு போன்று செயல்படுகிறது. அதாவது அலுவலகம் வரும்போது கதவுகளை திறப்பது, பன்ச் செய்வது, அவர்களுக்கான கணினியை பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு பயன்படுகிறது.

குழந்தை கல்லீரல்

பெரும்பாலும், மது அருந்துபவர்கள் கல்லீரல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். உடலிலுள்ள மிகப் பெரிய உறுப்பான கல்லீரல் பல காரணங்களால் ஏற்படக்கூடிய தொற்றால் பாதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 17,000 பேர் கல்லீரல் பாதிப்பால் அவதி படகின்றனர். இந்நிலையில், தற்போது கல்லீரலினை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு குழந்தை கல்லீரல் என பெயரிட்டுள்ளனர். கல்லீரலை செயற்கையாக உருவாக்க ஆய்வின்போது,  மனித உயிரணுக்களில் இருந்து உயிரணுக்களை எடுத்து பயன்படுத்துகின்றனர். இந்த சோதனை வெற்றி பெற்றால் கல்லீரல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

’ப்ளூ வேல்’ கேம்

உலக அளவில் பிரபலமாக வரும் ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல், பங்கேற்பாளருக்கு பல்வேறு சவால்களை அளிக்கும். நாளொரு சவால் வீதம் 50 நாட்களுக்கு கொடுக்கப்படும். ஆரம்பத்தில் சவால்கள் எளிதாகவே இருக்கும். ஆனால், போகப்போக சவால்கள் கடினமாக்கப்படும். இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற சவால் விடுக்கப்படும். இந்த விளையாட்டுக்கு அடிமையாகும் இளைஞர்களை நிஜ உலகத்துடனான தொடர்பை இழக்க செய்து, விர்ச்சுவல் எனப்படும் மாய உலகத்துக்குள் அழைத்துச் சென்று தற்கொலை செய்யத் தூண்டுவதுதான் இதன்  நோக்கம். இந்த விளையாட்டை வடிவமைத்த ரஷ்யாவின் பிலிப் புடேய்கின் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மஞ்சளின் மகிமை

நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது என அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தம்மாரா கண்டுபிடித்துள்ளார். இவரது ஆய்வில், மஞ்சளில் உள்ள மிக சிறிய ரசாயன பொருட்கள் மருந்தாகி நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்துவதாக தெரிய வந்துள்ளதையடுத்து, புற்று நோய் மருந்துகளில் மஞ்சளை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விந்தணு குறைவு

1973 - 2011-ம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட 185 ஆய்வுகளின்படி, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் தொடர்ந்து ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை பாதிக்கு பாதி குறைந்துள்ளதாம். இது நீடித்தால் மனித இனத்தின் அடையாளமே அழிந்து போகுமாம். ஆனால், ஆசியா, ஆப்பிரிக்காவில் இந்த அளவு பாதிப்பு இல்லையாம்.

சிறிய சாதனம்

‘ராஸ்பெர்ரி பை’ என்பது மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறிய கணினி ஆகும். இதை அடிப்படையாகக் கொண்டு, நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியக்கூடிய ‘ராஸ்பெர்ரி ஷேக் 4டி’  என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளனர். நிலநடுக்கத்தின்போது உருவாகும் கண்ணுக்குத் தெரியாத அசைவுகளைப் பார்ப்பதற்கும் இது உதவுகிறது. இதனால் நிலநடுக்கம் ஏற்படுவதை முன்பே நாம் கணிக்க முடியுமாம்.