துரித உணவுகள் உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள்

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      மருத்துவ பூமி
medigal

Source: provided

தற்கால வளர் இளம் பெண்கள் பெரும்பாலும் பீசா, பர்க்கர், நூடுல்ஸ், பான்பூரி, பரோட்டா  போன்ற  துரித உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

பரோட்டா :- ஏழைகளின் உணவு என பரோட்டவை சொல்லுகிறார்கள். இது நாண்,குல்ச்சா, ரொமலி ரொட்டி என பல வேறு விசயங்களும் எடுத்துக்கிறது.1930 களில்தான் பரோட்டா தயாரிக்கப் பயன்படும் மைதாமாவு அமெரிக்காவிலிருந்து அறிமுகமானது. அங்கு மைதாவின் பெயர் பேஸ்டரி பவுடர். அதாவது பசைமாவு, இரண்டாம் உலப்போரின்போது ஏற்பட்ட கோதுமைத் தட்டுப்பாட்டால் மைதா மாவு உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது.

ஒட்டும் பயன்பாட்டிலிருந்து மெல்ல மெல்ல உணவுப் பொருளாக மாறிய மைதா சில ரசாயன சுத்திரிகரிப்புகளுக்கப் பிறகு அழகான பொருளாக பார்ப்போரை ஈர்க்கும் விதத்தில் பளிச்சென வெள்ளை ஆனது.மைதாவை வெள்ளையாக்குவதற்காக பென்ஸாயில் பெராக்சைடு என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. நாகரீகமான வார்த்தைகளில் சொன்னால் அதன் பெயர் ப்ளீச்சிங் கெமிக்கல், புரிகிற மாதரி சொல்வதானால் பினாயில் என்றுதான் சொல்லவேண்டும். கெட்டியாக இருக்கும் மைதாவை மென்மையானதாக மாற்ற அலாக்சான் என்ற ரசாயானம் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயை எலிகளுக்கு வரவழைக்கும் ரசாயனத்தின் பெயர்தான் அலாக்சான்.

மேற்படி மைதாவை ரீபைண்டு ஆயிலோடு சேர்த்து தயாரிக்கிறோம். நச்ச   ரசாயனங்களின் கூட்டணியில் அமைந்த பராட்டாவை நாம் சாப்பிடும் போது நமக்கு இளம் வயதிலேயே சர்க்கரை நோய், pcod, obesity போன்ற நோய்கள் விரைவில் வந்துவிடுகிறது.

பிராய்லர் சிக்கன் :-  உணவு உண்பது என்பது ஒரு வழிபாடு போல முன்பு இருந்தது.இப்பொழுது சாப்பிடுவது என்பது ஏதோ திருவிழா போல ஆகிவிட்டது.  பிராய்லர்  கோழியின் உடல் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் ரோக்ஸார்ஜோன் என்ற ஹார்மோன் ஊசி மனிதர்களுக்கு புற்று நோயை (கல்லீரல் புற்று) உருவாக்கும் தன்மை வாய்ந்தது என்ற அமெரிக்க ஆராய்ச்சி உணர்த்துகிறது. பிராய்லர் சிக்கனை பயன்படுத்துவோருக்கு உடல் பருமன் மற்றும் வளர்இளம் பெண்கள் சிறு வயதிலேயே பூப்பெய்தல் போன்ற பாதிப்புக்களும் ஏற்படுகிறது.

நூடுல்ஸ் :- தற்போது மினிபஸ் போகாத கிராமங்ளுக்கு கூட 2 மினிட்ஸ் நூடுல்ஸ் போய்விட்டது. நூடுல்ஸ் தயாரிக்கப்படும் போதே ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க  வேக்ஸ் என்னும் மெழுகு தடவப்படுகிறது. அது பெருங்குடலுக்கு ஆபத்தான ஒன்று. நூடுல்ஸ் சுவையை கூட்டுவதற்கா கூடுதலாக உப்பு சேர்க்கப்படுகிறது.  இதனால் உடலில் சோடியம் அளவு அதிகரித்து சிறுநீரக பாதிப்பு வர காரணமாக அமைகிறது. மேலும் சுவையை கூட்டுவதற்காக ரசாயனக்  கொழுப்பும் சேர்க்கப்படுகிறது. நலம்தரவேண்டிய ஒரு உணவு, சுவை கூட்டுவதற்காக சேய்யப்படும் மசலா கலவை, உப்பு, செயற்கைக் கொழுப்பு, சோடியம் ரசாயனக் சுவை கூட்டிகள் ஆகியவற்றால் நோய் தரும் நஞ்சாக மாற்றப்படுகிறது.

குளிர்பானங்கள் :- வளர் இளம் பருவத்தினரிடம் உணவுக்கு பதில் குளிர்பானங்கள் அதிகம் சாப்பிடும் நாகரீகம் பரவி வருகிறது.  இந்த குளிர்பானங்களில் உள்ள செயற்கை பழச்சாறுகள், சுவையூட்டிகளும், கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பலவிதமான அமிலங்கள் கலக்கப்படுகின்றன. பொட்டாசியம், பென்சோவேட், சோடியம், சைக்ளோமேட், போன்ற வேதிப்பொருட்களையும் பெக்டின் ,அல்ஜினேட்,கராஜெனன் போன்ற திண்மையூக்கிளையும் பயன்படுத்துகின்றனர்.

சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்ற அமிலங்களும் மேற்கண்ட வேதிப்பொடுட்களும் இணைந்து நம் உடலை பதம் பார்க்கின்றன. இரைப்பையின் இயல்பு பாதிக்கப்பட்டு அமிலத்தன்மை உள்ளதாக மாறுகிறது. இரப்பை மற்றும் சிறுகுடல் பெருங்குடலில் புண்களை ஏற்படுத்தும் குணம்  இப்பொருட்களுக்கு உள்ளது. தொடர்ந்து குளிர்பானம் அருந்தும் பழக்கமுடையவர்களுக்கு உணவுகளில் இருந்து சத்துக்களை பிரிக்கும் தன்மை குறைந்து பசியின்மை, அஜீரணம், புளித்த ஏப்பம், எதுக்களித்தல், வயிற்றுவலி, வயிறு கனமான உணர்வு போன்ற தொந்தரவுகள் தோன்றும். காலப்போக்கில் முழு செரிமான இயக்கமே பாதிப்புள்ளாகும் அபாயம் இவ்வகை வேதிப்பொருட்களால் ஏற்படும். இக்காலத்தில் பெண்களுக்க ஏற்படும் எலும்புச்சிதைவு நோய்க்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாக குளிர்பானங்கள் இருக்கின்றன.

துரித உணவில் அதிர்ச்சி தரும் உண்மைகள் :- பாஸ்ட்புட் மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளும்  எம்.எஸ்.ஜி என்ற ரசாயன உப்பு கலக்கப்படுகிறது.  எந்தவகை ஹோட்டலாக இருந்தாலும் துரிதவகை உணவு என்றால் ருசிக்காக எம்.எஸ்.ஜி சேர்க்கப்படுகிறது.பீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்ற நிறைய உணவு வகைகளில் சேர்க்கப்படுகிறது. எம்.எஸ்.ஜி யின் வாசனை மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியை தூண்டுகிறது. ஹைபோதாலமஸ் இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்தும்.  இதனால்  அதிகமாகவும்,  அடிக்கடி உணவு உண்ணவேண்டும்  என்ற உணர்வும் தூண்டப்படும். இதனால் பலர் அடிக்கடி மற்றும் அளவில்லாமல் உண்கின்றனர். இதன் பக்கவிளைவு உடல் எடை கூடுவது மட்டுமில்லாமல் ,எம்.எஸ்.ஜி சேர்க்கப்படும்  துரிதவகை உணவுகளால் துத்தநாகம் குறைபாடு ஏற்பட்டு ஞாபக சக்தி குறைவு, கவனக்குறைவு, திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என பல பிரச்சனைகள் ஏற்படும்.

மேலும் தண்ணீர் அருந்தும் மற்றும் உணவு உட்கொள்ள பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும்   பிளாஸ்டிக்கினால் ஆனவகையாகவே உள்ளன. இவ்வாறு உபயோகிக்கும் பொழுது பிளாஸ்டிக்கில் உள்ள xeno Estrogen என்னும் கெமிக்கல் உடலுக்குள் ஊடுறுவி நமது  இயற்க்கையாக சுரக்கும் ஈஸ்ட்ரோஜனை செயல்பாடின்றி செய்து ஈஸ்ட்ரோஜன் செயல்பாடு போல xeno Estrogen   செயல்படும். ஆனால் xeno Estrogen னினால் இயற்கையான ஈஸ்ட்ரோஜன் போல் சினை உறுப்பு கருமுட்டை வளர வைக்கவோ, வெடிக்க வைக்கவோ முடியாது. இதனால் வளர்இளம் பெண்களுக்கு pcod ம் சினை உறுப்பு நீர்கட்டிகளும் உண்டாகி முறையற்ற மாதவிடாய் போக்கை உண்டாக்குகிறது. இதனாலேயே முன்மாதவிடாய் சிக்கல்களாக எரிச்சல், கோபம், டென்சன், மனஅழுத்தம், மன உளச்சல் முதலியன பெரும்பாலான வளர் இளம் பெண்களுக்கு உண்டாகிறது.

இதற்கான தீர்வு :- 1.கூடுமானவரை இயற்கை உணவுகளை மற்றும் ஆர்கானிக் உணவுகளையே அதிகம் உட்கொள்ள வேண்டும். 2.துரிதஉணவுகளை தவிர்க்க வேண்டும். நம்மால் முடிந்தவரை உணவு தயாரிப்பதற்கான பொருட்களை வீட்டிலேயே ரெடி செய்து கொள்வது நல்லது. நம்முடைய பாரம்பரிய நூடுலான இடியாப்பத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம்.  தினசரி உணவாக இருக்கும் நூடுல்ஸை படிப்படியாக மாற்றி சிறு தானிய உணவுகளைப் பழக்கப்படுத்தலாம். குளிர்பானங்களுக்கு பதிலாக வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர், பழ ஜூஸ்களைக் குடிக்கலாம். மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகளின் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு பராட்டாவிற்கு பதில் கோதுமை பராட்டா, சப்பாத்தி போன்ற உணவுகளை சாப்பிட பழக்கலாம்.  3. ஒரு நாளைக்கு குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க  வேண்டும்.

4. caffine, chocklate  அதிகம் உட்கொள்ளக்கூடாது.

5. யோகாசனம், தியானம்,போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் "காலை மாலை தினம் நடப்பவரின் காலைத் தொட்டுக் கும்பிடுவான் காலனே"

6.தண்ணீர் அருந்துவதற்கு மண்பானை, மற்றும் செப்பு பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்.( தண்ணீர் அருந்தும்போது இதில் உள்ள காப்பர் தனிமம் நமது உடலுக்குள் ஊடுறுவி சினை உறுப்பு வளர்ச்சிக்கு உதவுகிறது). பூப்பெய்திய முதல் ஓராண்டு வரையாவது பெண்கள் சரியான உணவு முறைகளை உட்கொள்ள வேண்டும். வயதுக்கு வருவது என்பது வெறுமனே உதிரப்போக்கு அல்ல. அந்த காலகட்டத்தில் பெண்ணின் கருப்பை, சினை உறுப்பு வளர்ச்சியும், இடுப்பு எலும்பு  வளர்ச்சியும் மற்ற எலும்புகளின் வளர்ச்சியும் அதிகமாகிறது. எனவே அந்த நேரத்தில் ஏராளமான புரதம், கால்சியம்,மற்றும்இரும்புசத்து தேவை. அதனால்தான் நம் கலாச்சாரத்தில் பெண்கள்  வயதுக்கு வரும்போது முட்டை ,நல்லெண்ணெய், உளுந்து போன்றவற்றை கட்டாயம் சாப்பிடத்தரும் பழக்கம் இருக்கிறது.

4.இரத்த சோகை :-  வளர்  இளம் பருவத்தில்  போதுமான சரிவிகித உணவு உட்கொள்ளாமை பெரும்பாலான பள்ளி மாணவ மாணவிகள் பகல் உணவைத் தவிர்க்கிறார்கள்.  இயற்கை உணவான கீரை, காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்வதில்லை,. சுகாதாரமற்ற முறையில் சாலை ஓரங்களில் கிடைக்கும் பாஸ்ட் புட் உணவு வகைகளை உட்கொள்வதினால் வரும்  வயிற்றில் பூச்சி மற்றும் கிரிமி  தொல்லைகளினாலும் இரத்தசோகை வரலாம்.  வளர் இளம் பெண்களுக்கு இப்பருவத்தில்  வரும் ஒழுங்கற்ற  மாதவிடாய் போக்கினாலும் இரத்த  சோகை வரலாம்.

இதற்கான தீர்வு :-  இதற்குத்தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்து காரணங்களை சரிசெய்ய  வேண்டும். வளர் இளம் பருவத்தில் போதுமான சரிவிகித உணவு- பழங்கள், கீரைகள், காய்கறிகள் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள  வேண்டும். இதனால் அப்பருவத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதினால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம்.

5. தலைமுடி உதிர்தல் :- போதுமான சத்துணவு உட்கொள்ளாததினாலும், தேவையற்ற இராசாயன பொருட்கள் கலந்துள்ள சாம்புகளை பயன்படுத்தினாலும், தலைமுடி யை சரிவர  பராமரிக்காததாலும், மலச்சிக்கல், இரத்த சோகை, போன்ற காரணங்களினாலும், அதிக மன அழுத்தத்தினாலும், தலைமுடி வேர்களுக்கு தேவையான இரத்த ஓடேடமும் போசாக்கும் கிடைப்பதில்லை.ஆகையால் தலைமுடி உதிர்கிறது.

California fire looks like hell on earth | கலிபோர்னியா தீ விபத்து காட்சிகள்

Easy, Simple Rangoli Designs for Beginners | 7 Beautiful Rangoli design for festivals | LGArts - 2

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்: