Idhayam Matrimony

பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு

செவ்வாய்க்கிழமை, 13 ஜனவரி 2026      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறாதவர்களும் இன்று பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை சென்னை ஆலந்தூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜன. 8 ஆம் தேதி தொடங்கிவைத்தார். இந்த பரிசுத் தொகுப்புகள் நியாய விலைக் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக அந்தந்த நியாய விலைக் கடை ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று குறிப்பிட்ட தேதியிட்டு டோக்கன் விநியோகித்தனர்.

அந்த டோக்கன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 3,000 பரிசுத் தொகை மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. டோக்கன் பெறாதவர்கள் அனைவரும் நேற்று நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மக்கள் சிரமமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு வசதியாக இன்றும் நியாய விலைக் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறாதவர்கள் இன்று பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து