முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செந்தமிழ்ச்சோலை இலக்கிய அமைப்பின் 21ஆம் ஆண்டு நிறைவு விழா

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      சென்னை

கும்மிடிப்பூண்டி செந்தமிழ்ச்சோலை இலக்கிய அமைப்பின் 21ஆம் ஆண்டு நிறைவு விழா ஞாயிறன்று கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.

 

கும்மிடிப்பூண்டியில் கடந்த 21ஆண்டுகளாக செயல்பட்டு வரும் செந்தமிழ்ச்சோலை இலக்கிய அமைப்பு தனது 21வது ஆண்டு நிறைவு விழாவை கும்மிடிப்பூண்டியில் நடத்தியது.

 

விழாவிற்கு செந்தமிழ்ச்சோலை அமைப்பின் தலைவர் கோ.ம.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செந்தமிழ்ச்சோலை நிறுவனர் வ.விசயரங்கன் வரவேற்றார். செந்தமிழ் சோலை மூத்த உறுப்பினர் சுதந்திர தேவி குத்துவிளக்கேற்றினார். செயலாளர் மு.சிவராமசுப்பிரமணியன் ஆண்டறிக்கை.

 

தொடர்ந்து சூ.சங்கரி, சூ.சந்தியாவின் பரதமும் யோகமும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தொழிலதிபர் ஏ.வி.ராமகிருஷ்ணன், புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மா.செல்வராஜ் முன்னிலையில் கும்மிடிப்பூண்டி வட்ட அளவில் 10,12ஆம் வகுப்பு தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கதிர் நடராஜன், வெருவுத்தம்மாள், மல்லிகேசுவரன் அறக்கட்டளைகள் சார்பில்

நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

 

தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் ஏ.வி.இரமணன், சென்னை முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் மா.கருணாநிதி, டி,ஜெ,எஸ் கல்வுி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ சி.எச்.சேகர், தமிழக பேரிடர் மேலாண்மை துணை இயக்குனர் ச.கந்தசாமி,வழக்கறிஞர் மு.மணிபாலன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். தொடர்ந்து செந்தமிழ்ச்சோலை 21ஆம் ஆண்டு விழாவை ஒட்டி நடைபெற்ற பல்வேறு இலக்கிய திறனறிதல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை சான்றிதழ்களை வழங்கினார்கள்.

 

தொடர்ந்து செந்தமிழ்ச் சோலை துணை தலைவர் ச.சுரேஷ் தலைமையில் பள்ளி மாணவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. பின்னர் வழக்கறிஞர் பால.சீனிவாசன் நடுவராக சமூக வளை தளங்களில் நாம் பெற்றது அதிகம், இழந்ததே அதிகம் என்ற தலைப்பில் பட்டிமண்டபம் நடைபெற்றது. தொடர்ந்து கவியரசர் இளந்தேவன் தலைமையில் 8 கவிஞர்கள் பங்கேற்ற இன்று புதிதாய் பிறந்தோம் என்ற தலைமையில் கவியரங்கள் நடைபெற்றது. பின்னர் டி.கே.வரதராஜ ஆசான் சிலம்ப கலைக்கூட மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சியும், சென்னை பெரம்பூர் சி,டி.டி,இ மகளிர் கல்லூரி மாணவிகளின் ஒயிலாட்ட நிகழ்வும் நடைபெற்றது,

 

விழா முடிவில் செந்தமிழ்ச்சோலை பொருளாளர் து.துலுக்காணம் நன்றி கூறினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை செந்தமிழ்ச் சோலை நிர்வாகிகள் சுவாமிநாதன், ரங்கபாஷ்யம், கோபாலகிருஷ்ணன், சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago