அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவருக்கு ஒரு மரம் வளர்த்தல் திட்டம்

karikudi

 காரைக்குடி.- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தூய்மை இந்தியா மையம், நாட்டு நலப்பணித் திட்டம், சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தாவரவியல் துறையின் சார்பில் “ஒருமாணவர் - ஒருமரம் வளர்த்தல்” என்னும் திட்டத்தின் கீழ் 5145 மரக ;கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டது. முதற் கட்டமாக 10.1.2017 அன்று 1000 மரக்கன்றுகளும், இரண்டாம் கட்டமாக 10.2.2017 அன்று 1200 மரக்கன்றுகளும் நடப்பட்டன.  அதன் தொடர்ச்சியாக, மூன்றாம் கட்டமாக நேற்று முன் தினம் 1100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
 அழகப்பாபல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் மரக்கன்றை நட்டு இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தேவகோட்டை சார்-ஆட்சியர் முனைவர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப.,மற்றும் பல்கலைக் கழகப் பதிவாளர் (பொ.) முனைவர் வி. பாலச்சந்திரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
 அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக முதுகலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொரு வரும் தனித்தனியாக தங்களுக்குரிய மரக்கன்றுகளை துணைவேந்தரிடமிருந்து பெற்று அவர்களுக் கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் நட்டனர்.
 பல்கலைக்கழக முதுகலைவளாகம், கல்வியியல் கல்லூரிவளாகம் மற்றும் அழகப்பாபல்கலைக்கழக உடற்கல்வியியல் வளாகம் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
 தூய்மை இந்தியாமைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர். ராஜன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. இராசாராம், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ். கருப்புசாமி, தாவரவியல் பூங்கா ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஏ. ஆறுமுகம், கல்வியியல் கல்லூரியைச் சார்ந்த பேராசிரியர்கள், சிறப்புகல்வியியல் மற்றும் மறுவாழ்வு துறைபேராசிரியர்கள், அழகப்பாபல்கலைக்கழக உடற்கல்வியியல் துறைபேராசிரியர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ