எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் நடைபெற்ற தொழில்முறை வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை கலெக்டர்எம்.ரவி குமார் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது,மாணவர்கள் மத்தியில் இவ்விழா நடப்பது மிகவும் பொருத்தமாகும், பிறக்கும் போது எல்லோரும் ஒன்று போல் தான் பிறக்கிறார்கள். பின்னர் அவர்களது அறிவு என்பது புகட்டப்படுவதும், தேடப்படுவதும் தான். மாணவர்கள் தோல்வி என்பதை வெற்றிக்கு படிக்கட்டாக அமைக்க வேண்டும்;, 18 வயது முதல் 24 வயது வரை அறிவைத்தேடும் உங்களது உழைப்பு தான் உங்களது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கிறது. படித்தவர்கள் மற்றும் திறமையானவர்களுக்கு வேலைவாய்ப்புகள் எப்பொழுதும் இருக்கிறது. படிப்புடன் உழைப்பும், திறமையும், தன்னம்பிக்கையும் இருந்தால் தான் வாழ்வில் வெற்றி பெற முடியும். வெற்றியாளர்களைத்தான் இவ் உலகம் போற்றும். இளைஞர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும், உயர் கல்வி கற்பதற்கும் அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறது. இவற்றை இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு உயர் பதவிகளில் அமர்வதை மாணவர்கள் தங்களது லட்சியமாக கொள்ள வேண்டும். அரசு நடத்தும் தேர்வில் வெற்றி பெற தேவையான வழிகாட்டுதல்களை அரசு உருவாக்கி தருகிறது. சுயமாக தொழில் தொடங்குவதற்கும் உதவி புரிகிறது. இப்படி பல்வேறு வகையில் வேலைவாய்ப்புக்ளை அரசு வழங்குகிறது. எனவே அரசு வழங்கிய இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என இளைஞர்களாகிய உங்களை கேட்டுக் கொள்கிறேன். - என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப் மதுரை மண்டல வேலைவாய்ப்பு இயக்குநர் நடராஜன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், நாகேந்திரன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் இராஜஇராஜன், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் நாகராஜன், முன்னோடி வங்கி உதவி பொது மேலாளர் பிரபாகர், காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன், வ.உ.சி கல்லூரி இணை பேராசிரியர் பேச்சிமுத்து, புனித.அலாய்சியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் .எழிலன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


