முகப்பு

தூத்துக்குடி

Image Unavailable

தூத்துக்குடி மாவட்ட தருவைகுளத்தில் முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, கடம்பூர் செ.ராஜு ஆய்வு

8.Aug 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமினை கூட்டுறவுத்துறை ...

Image Unavailable

கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்திரகாளியம்மன் திருக்கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

8.Aug 2017

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருககோவில் ஆடி மாத பொங்கல் திருவிழா நேற்று ...

tutycorin colector 2017 07 19

துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தூத்துக்குடி வீரர்:கலெக்டர் என்.வெங்கடேஷ் வாழ்த்து

19.Jul 2017

சென்னை, ஆவடி காவல்துறை மைதானத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ...

Image Unavailable

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

19.Jul 2017

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வைகுண்டர் ...

Image Unavailable

கும்பாவுருட்டி அருவி தடாகத்தில் மூழ்கி தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பேர் பலி

2.Jul 2017

கேரள மாநிலம் அச்சன்கோவில் கும்பாவுருட்டி அருவியில் குளிக்கச் சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பேர் தடாகத்தில் மூழ்கி பரிதாபமாக...

tuty collector 2017 07 02

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பொது சுகாதார பணிகள் கலெக்டர் என்.வெங்கடேஷ் ஆய்வு

2.Jul 2017

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பொது சுகாதார பணிகள் மற்றும் 4வது பைப் லைன் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ...

ifthar nonbu

கோவில்பட்டியில் மனிதநேய உதவும் கரங்கள் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் விருந்து

25.Jun 2017

கோவில்பட்டியில் உள்ள டவுண் ஜாமியா பள்ளிவாசலில் மனித நேய உதவும் கரங்கள் சார்பில் இப்தர் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் ...

tutucorin collector

தோட்டகலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் கலெக்டர் வெங்கடேஷ் ஆய்வு

25.Jun 2017

தூத்துக்குடி கலெக்டர்என்.வெங்கடேஷ், , விளாத்திக்குளம் வட்டம், எப்போதும்வென்றான், கண்ணக்கட்டை, சின்னையாபுரம், தங்கம்மாள்புரம், ...

minister kadambur raju open vanjinathan photo 2017 06 19

கோவில்பட்டியில் வாஞ்சிநாதன் படதிறப்புவிழா: அமைச்சர் கடம்பூர்ராஜூ பங்கேற்பு

19.Jun 2017

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு காயத்திரி திருமண மண்டபத்தில் இந்திய கலாச்சார நட்புறவு கழகம் சார்பில் வாஞ்சிநாதன் ...

Image Unavailable

நூதனமுறையில் ஏடிஎம் நம்பரை கேட்டு ரூ.1.26 லட்சம் மோசடி : மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2 பேர் கைது

19.Jun 2017

தூத்துக்குடி அருகே ஏடிஎம் நம்பரை கேட்டு நூதன முறையில் ரூ.1.26 லட்சம் பணத்தை மோசடி செய்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த 2பேரை போலீசார் ...

tuty collector 2017 06 19

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 5 நபர்களுக்கு தலா ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் என்.வெங்கடேஷ் வழங்கினார்

19.Jun 2017

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சித்தலைவர் கலெக்டர் என்.வெங்கடேஷ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ...

new building open 2017 06 18

கோவில்பட்டி அருகே கே.வெங்கடேசபுரத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைச்சர் கடம்பூர்ராஜூ திறந்து வைத்தார்

18.Jun 2017

கோவில்பட்டி அருகே கே.வெங்கடேசபுரத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி  கட்டிடத்தினை ...

retired military persons job conference 2017 06 16

முன்னாள் படைவீரர்களுக்கான சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கு கலெக்டர் என்.வெங்கடேஷ் துவக்கி வைத்தார்

16.Jun 2017

முன்னாள் படைவீரர்களுக்கான சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கு முன்னாள் படைவீரர் நலன் அலுவலகத்தின் மூலம், கலெக்டர் அலுவலகத்தில் ...

tcr gh dialodgis section open 2017 06 16

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள டயாலிசீஸ் பிரிவு ஆர்டிஓ கணேஷ்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார்

16.Jun 2017

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.7 லட்சம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டயாலிசீஸ் பிரிவில் உள்ள இயந்திரத்தின் ...

moon soon preventive meetting 2017 06 13

தென்மேற்கு பருவமழையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கூட்டம் கலெக்டர் என்.வெங்கடேஷ் தலைமையில் நடந்தது

13.Jun 2017

வரும் ஜுன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்கின்ற காலங்களாகும். தென்மேற்கு பருவமழையின் போது நமது ...

Image Unavailable

14ம் தேதி சிவராமமங்களம் பெரிய சாஸ்தா அய்யனார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா

11.Jun 2017

சிவராமமங்களம் பெரிய சாஸ்தா அய்யனார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா வரும் 14ம் தேதி நடக்கிறது.ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ...

tuty collector 2017 06 11

பிள்ளையார்நத்தம்கிராமத்தில் கோடை உழவு பணி துவக்க விழா கலெக்டர் என்.வெங்கடேஷ் பங்கேற்பு

11.Jun 2017

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டம் பிள்ளையார்நத்தம் கிராமத்தில்  வேளாண்மைத்துறையின் சார்பில், நீடித்த நிலையான ...

Image Unavailable

கோரம்பள்ளம் குளத்தில் தூர்வாரும் பணி: கலெக்டர் என்.வெங்கடேஷ் துவக்கி வைத்தார்

11.Jun 2017

கோரம்பள்ளம் குளத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் இணைந்து குளம் தூர்வாரும் பணிகளை தூத்துக்குடி ...

tutycorin collector issue free note book 2017 06 08

அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல் கலெக்டர் என்.வெங்கடேஷ் வழங்கினார்

8.Jun 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் மூலம் 84 அரசு பள்ளிகள், 131 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் ...

tcr temple kadambur raju vist 2017 06 08

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாக விழா பணிகள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ ஆய்வு

8.Jun 2017

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வைகாசி விசாகம் 06.06.2017 முதல் 08.06.2017 முடிய மூன்று ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எதிர்கால தொழில்நுட்பம்

நெடுஞ்சாலைப் பயணத்துக்கு மட்டுமே பொருந்தும் ஒரே ஓட்டுநரால் இயக்கப்படும் பல வாகனத் தொடர்  அதாவது 'டிராக் ப்லாடூன்' தொழில்நுட்பத்தில், வாகனங்கள் அனைத்தும் ஒரே சீரான வேகத்தில் செல்ல முடியும். வாகனங்களுக்கு இடையேயான இடைவெளி ஒரே அளவாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், 20 சதவிகிதம் வரை எரிபொருள் சேமிக்கப்படுமாம். வைஃபை எனப்படும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் மற்ற வாகனங்கள் இணைக்கப்பட்டு இது செயல்படுத்தப்படுகிறது. வைஃபை, ஸ்டீரிங் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றுக்குத் தேவையான சில கருவிகளைப் பொருத்திவிட்டால், எந்தவொரு காரும், ப்லாடூன் வாகனத் தொடரில் இணைய முடியும். ஒரே நேரத்தில் பல வாகனத் தொடர்கள் ஒரே சாலையில் செல்வதும், ஒரு வாகனத் தொடரில் செல்லும் கார், மற்றொரு வாகனத் தொடருக்கு மாறுவதும் இந்த தொழில்நுட்பம் மூலம் சாத்தியம்.

கழுத்து சுருக்கம் போக..

சரியான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்காமல் இருப்பது, ஹார்மோன் பிரச்சினைகளால் கழுத்து சுருக்கங்கள் ஏற்படுகிறது. இதை போக்க,  அன்னாசி பழ சாறை கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். மேலும், முட்டைக்கோஸ் சாறு,  தக்காளி பழ சாறு, ஆலிவ் எண்ணெயை கொண்டும் கழுத்து சுருக்கத்தை போக்கலாம்.

இதற்குமா ரோபோட்?

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடந்த கண்காட்சியில் பெப்பர் எனும் ரோபோட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த ரோபோட் புத்த மதம் பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்கு பணிகளை செய்து காண்பித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதில் உள்ள மென்பொருள் மூலம் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இவற்றை பயன்படுத்தி இறுதி சடங்கை மேற்கொள்ளலாம்.

புதிய சிகிச்சை

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, வயதானவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவது குறித்த சோதனை முயற்சியை மேற்கொண்டது. வயதானவர்கள் உடலில் இளைஞர்களின் ரத்தத்தை ஏற்றுவதுதான் அந்த முயற்சி. வயதானவர்கள், உடலில் இளைஞர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் முடிவுகள் நல்லவிதமாக வந்துள்ளதாம்.

புதிய தகவல்

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் நாசாவின் மார்ஸ் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் பிடித்துள்ள புகைப்படத்தில் பனிக் குன்றுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் உயர் ரெசொல்யூஷன் கொண்ட இமேஜிங் அறிவியல் பரிசோதனை திறன் கொண்ட கேமரா (HiRISE ) மூலம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் பனி மலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தரையில் தூக்கம்

உடலில் தோன்றும் வலிகளுக்கு காரணம் இடுப்பிலும், தோளிலும் ஏற்படும் சீரற்ற தன்மையால் தான். மேலும், தோள்கள், மேல் முதுகு, கீழ் முதுகு, கைகள், கழுத்து எலும்பு, கழுத்தின் அடி பாகம், தலை போன்ற இடங்களில் வலி ஏற்படலாம். முதுகை தரையில் வைத்து படுப்பதால் இடுப்புகளும், தோள்களும் வலி இல்லாமல் இருக்கும். இதனால் மற்ற பகுதிகளில் ஏற்படும் வலிகளும் முற்றிலும் நீங்கும்.

உதடு வறட்சி

உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்ல‍து காய்ந்து போவதற்கு உடலின் வெப்ப‍நிலை அதிகரிப்பே காரணம். உஷ்ணத்தைக் குறைக்கும் மோரை அடிக்கடி பருகினால் நல்லது. மேலும் வெண்ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். மேலும் ஒவ்வொரு நாள் இரவில் வெண்ணெயைக் கொஞ்சம் உதட்டில் தடவிக்கொண்டு படுக்கைக்கு செல்ல‍ வேண்டும்.

ஆக்ஸிஜனின் பிறப்பிடம்

பூகோளத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகளின் மொத்த பரப்பளவு 55 லட்சம் ச.கி.மீ. பிரேசில் உள்ளிட்ட 9 நாடுகள் வரை நீண்டிருக்கும் இதை ஒரு நாடாக கருதினால், பரப்பளவில் இது 9-வது இடத்தைப் பிடிக்கும். இதில் 6,400 கி.மீ. தூரமுள்ள நதி ஓடுகிறது. நீளமான நதிகளின் பட்டியலில் அமேசான் நதி 2-ம் இடத்தில் உள்ளது. 40 ஆயிரம் தாவர இனங்கள், 3 ஆயிரம் மீன் இனங்கள், 400க்கும் மேற்பட்ட பாலூட்டிகள் இங்கு வசிக்கின்றன. அமேசான் மழைக்காடுகளால் தான் உலகிற்கு 20 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்போட்ட பறவை இனங்களும், 25 லட்சம் வகை பூச்சிகளுக்கும் அமேசான் காடுகள்தான் வாழ்விடமாக இருக்கின்றன. உலகில் 3 டி.செ வெப்பநிலை அதிகரிப்பால் இந்த காடு தற்போது அழிவை எதிர்நோக்கியுள்ளது.

பனிஉருகும் அபாயம்

பூமிப்பந்தின் தென்கோடியில் அமைந்துள்ள அண்டார்டிகா முழுவதும் பனிப்பாறைகளைக் கொண்ட கடல் ஆகும். கிரீன்ஹவுஸ் வாயுக்களாலும், வெப்பமயமாகும் கடலாலும் காலநிலை மாற்றம் ஏற்பட்டு துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி வரும் வேளையில், மேற்கு அண்டார்டிகாவில் 91 புதிய எரிமலைகள் இருப்பதை சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றின் மூலம் எப்போது வேண்டுமானாலும் பனிப்பாறைகளுக்கு பாதிப்பு வரலாம். இதனால் பனி உருகி கடல் மட்டம் உயரும் அபாயமும் உள்ளது. இது உலகிற்கு மிக முக்கியமான எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. மேலும், இந்த நூற்றாண்டு பூமியின் தென் துருவத்திற்கு அவ்வளவு சிறப்பானதாக இருக்காது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வருவதாக ஆய்வாளர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர்.

புத்துணர்ச்சிக்கு காபி

மூளையில் அடினோசின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மனதை அமைதியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது. காபி குடிக்கும்போது அதில் உள்ள கெஃபைன், அடினோசின் ஆதிக்கத்தைக் குறைப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 250 மி.கிராம் கெஃபைன் உட்கொள்வது நல்லது. அதாவது நாள் ஒன்றுக்கு 2 தடவை மட்டும் காபி அருந்தினால் நல்லதாம்.

பாதாமின் அற்புதம்

பாதாம் உடல் வலிமையையும், எலும்பின் வலிமையையும் ஊக்கவிக்கிறது.பாதாம் உட்கொள்வதால், இதய கோளாறுகள், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், உடல் பருமன், பற்கள் வலி, பித்தக்கற்கள், இரத்த சோகை, மூளை சோர்வு, மலச்சிக்கல் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு சீரான தீர்வுக் காண முடியும்.  பாதாமை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களது எலும்பு நன்கு உறுதியாகும்.

அத்திப்பழம் மகிமை

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றுகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.  தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.  மலச்சிக்கல் போகும்.