முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்மிடிப்பூண்டி ஸ்ரீ கலைமகள் வித்யாமந்திர் 17ஆம் ஆண்டு விழா

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      சென்னை
Image Unavailable

கும்மிடிப்பூண்டியில் ஸ்ரீ கலைமகள் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 17வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 

விழாவிற்கு கும்மிடிப்பூண்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் டி.கே.மாரிமுத்து தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் தேன்மொழி திருஞானம் முன்னிலை வகித்தார். பள்ளியின் நிறுவனத் தலைவர் டாக்டர் யு.திருஞானம் வரவேற்றார்.

 

விழாவில் 2015-16 ஆண்டு 10ஆம் வகுப்பு மற்றம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடங்களில் 100சதவீத மதிப்பெண்கள் எடுத்துச் சாதனைப் படைத்த மாணவ, மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் 17 மாணவர்களை சமூகவியல் பாடத்தில் நூறு சதவீத மதிப்பெண் பெற செய்த ஆசிரியை கோமாளாவிற்கு 1 சவரன் தங்க நாணயமும், பள்ளி ஆசிரியர்கள் ஆ.நீலகண்டன், பி.சங்கர்,மு.விமலா ஆகியோருக்கு தங்க நாணயங்களும் பரிசளிக்கப்பட்டது. சிறந்த தேர்ச்சியினை தந்த ஆசிரியர்கள் மு.கோமளா, ரு.புவனேஷ்வரி, மு.விமலா, டு.லீலாகுமார் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

 

மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எழுத்தாளர் சந்தர சுப்பிரமணியன், தொழிலதிபர் சு.அழகியமணவாளன், சமூக சேவகர் ரு.மு.பழனி பரிசுகளை வழங்கினர். மேலும் மாவட்ட அளவிலான 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்த இப்பள்ளி மாணவர் இமய தமிழ்செல்வனுக்கு ரூபாய்6000 ஊக்கத் தொகை விழாவில் வழங்கப்பட்டது.

 

விழாவில் டாக்டர் வு.ஞானதீபன் சிறப்புரையாற்றினார். விழாவில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் கூடுதல் பதிவாளர் து.என்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக வருகை தந்து, பள்ளியில் பணிபுரியும் அனைவருக்கும் வருங்கால வைப்புநிதி, மருத்துவக் காப்பீடு திட்டங்களை துவக்கி வைத்து பள்ளியையும் மாணவர்களின் திறமைகளையும் பாராட்டி பரிசுகள் வழங்கினார். முடிவில் மாணவ,மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிள் நடத்தப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்