கோஆப்டெக்ஸின் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்பு விற்பனை கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      கன்னியாகுமரி
03

கன்னியாகுமரி.

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  கோஆப்டெக்ஸின் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு விற்பனையை, நாகர்கோவில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில்  குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து, பட்டுச்சேலை இரகங்களை பார்வையிட்டு, தெரிவித்ததாவது:-2012-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, அனைத்து பிரிவு வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள ‘ இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் ” திட்டம் ஐந்து ஆண்டு காலமாக விற்பனை சாதனை படைத்துள்ளது.  இதன் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், 22.02.2017 முதல் 28.03.2017 வரை இத்திட்டம் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது.  கைக்குட்டை முதல் பட்டுச்சேலை வரை அனைத்து ரகங்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். இத்திட்டத்திற்காக பிரத்தியேகமாக துணி வகைகள் வரவழைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய வடிவமைப்புகளில் பட்டுச் சேலைகள், மென்பட்டுச் சேலைகள், காட்டன் சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், வேட்டிகள், துண்டுகள், ரெடிமேட் சட்டைகள், லினன் சட்டைகள் உள்பட அனைத்து ரகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நமது மாவட்டத்தில் உள்ள 4 விற்பனை நிலையங்களில் கடந்த வருடம் இத்திட்டத்தின் மூலம் ரூ.101 இலட்சம் அளவில் விற்பனை நடந்துள்ளது.  இவ்வருடத்திற்கு, ரூ.130 இலட்சம் விற்பனை செய்ய குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதில், குமரி கோ-ஆப்டெக்ஸ், நாகர்கோவில் விற்பனை நிலையத்தில் மட்டும் கடந்தாண்டு 2 வாங்கினால் 1 இலவசம் என்ற திட்டத்தில் ரு. 64.71 இலட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு, குமரி                       கோ-ஆப்டிடக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ.90.00 இலட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  அவர்கள் தெரிவித்தார். அதனை தொடர்ந்து,  ‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்” என்ற திட்;டத்தில், செல்வி ஆ.ரஷ்மி அவர்களுக்கு பட்டுச்சேலையை வழங்கி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாககுழு உறுப்பினர் ஆ.மரியஅந்தோணி, மண்டல மேலாளர் (திருநெல்வெலி) க. இசக்கிமுத்து, குமரி கோ-ஆப்டெக்ஸ் நாகர்கோவில் விற்பனை நிலைய மேலாளர்  மு. மனோகரன்,  ஜான்சிலின் விஜிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: