முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வந்தவாசியில் சீமை கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

வந்தவாசியில் சீமை கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு வந்தவாசி முதன்மை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நிலவரசன் அவர்களால் இப்பேரணி கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.இப்பேரணிக்கு வந்தவாசி வட்டாட்சியர் எஸ்.முருகன் தலைமை தாங்கினார்.வந்தவாசி நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார்.இப்பேரணியில் துணை வட்டாட்சியர்கள் எஸ்.திருமலை, பி; .மூர்த்தி ,வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர்,பெரணமல்லூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்;,வருவாய்த்துறை ஊழியர்கள் ,நகராட்சி ஊழியர்கள், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மாணவிகள்,எஸ்.ஆர்.ஐ. கல்லூரி மாணவர்கள், தென்னாங்கூர்அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் என 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சீமைகருவேல மரங்களின் தீமைகள் குறித்தும் அம்மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் ஏற்படும் நிலத்தடி நீர்மட்ட குறைவு மற்றும் அம்மரங்களில் ஆடு மாடுகளை கட்டி வைப்பதால் விலங்குகள் மலட்டுத்தன்மை அடைவது குறித்தும் கோஷங்களை எழுப்பியும் பதாகைகளை ஏந்தியும் பழைய பேருந்து நிலையம்,பஜார் வீதி, தேரடி,கந்தி சலை வழியதாக ஊர்வலம் சென்றனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்