முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த கடகத்தூர் புதிய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக கட்டிடம்: கலெக்டர் கே.விவேகானந்தன் பார்வையிட்டார்

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      தர்மபுரி
3

 

தருமபுரி மாவட்டம், கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள புதிய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக கட்டிடம், தமிழக முதல்வர் அவர்களால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. தருமபுரி கலெக்டர் கே.விவேகானந்தன் புதிய வேலைவாய்ப்பு அலுவலக கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவிடும் பொருட்டு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை படிவங்கள் வழங்கியும், பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த வேலைவாய்ப்பு அடையாள அட்டை வழங்கியும் சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மண்டல இணை இயக்குநர் . லதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. சண்முகசுந்தரம், கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் நிலையத்தின் உதவி இயக்குநர் காந்தி மற்றும் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர், . மகேஸ்வரி உட்பட துறை ரீதியான அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: