முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமணசுவாமி திருக்கோயிலில் ரூ.50 இலட்சம் மதிப்பில் சமையல் கூடம் மற்றும் இருப்பறை கட்டட கட்டுமான பணிகள் :அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமணசுவாமி திருக்கோயிலில் ரூ.50 இலட்சம் மதிப்பிலான சமையல்கூடம் மற்றும் இருப்பறை கட்டடத்தின் கட்டுமான பணியினை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூமிபூஜையிட்டு  பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

அருள்மிகு கல்யாண வெங்கடரமணசுவாமி திருக்கோயிலில் அன்னதானம் வழங்கும் இடம் சிறியதாக இருப்பதால் 100 நபர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் சமையல்கூடம், உணவு அருந்தும் கூடம், சமையல் பொருட்கள் இருப்புஅறை ஆகியவற்றை புதிதாக கட்டுவதற்கு திருக்கோயில் அன்னதான திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைந்து கட்டுமானப்பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்