முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக்கண்காட்சி : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்து பார்வையிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      கரூர்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்கப் சிறப்பு புகைப்படக்கண்காட்சியை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று (11.03.2017) திறந்து வைத்து பார்வையிட்டார்.

இக்கண்காட்சியில் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், வரலாற்று புகழ்பெற்ற தலைவர்களுடன் மறைந்த முதலமைச்சர் அம்மா பங்கேற்ற நிகழ்வுகளின் புகைப்படங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சி அனைத்து பொதுமக்களும் பார்த்து பயன்பெறும் விதத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்துச் சென்றனர்.

மேலும், இக்கண்காட்சியையொட்டி அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் அரசின் செய்திமலர்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து திரையிட்டு காட்டப்பட்டது.

இக்கண்காட்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்