முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பர்கூர் மலைப் பகுதியில் பலத்த மழை வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23 அடியாக உயர்வு

புதன்கிழமை, 15 மார்ச் 2017      ஈரோடு

பர்கூர் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால், அந்தியூர் வனப் பகுதியில் உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23 அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒரே நாளில் 11 அடி உயர்ந்துள்ளது. பர்கூர் மலையடிவாரத்தில் உள்ள இந்த அணையின் முழு கொள்ளளவு 33 அடி. கடும் வறட்சியால் அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால், 12 அடியாக நீர் இருப்பு இருந்தது. இந்நிலையில், பர்கூர் சுற்று வட்டார மலைப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது.  வரட்டுப்பள்ளம் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான தாமிரக்கரை, போளி, வடகரை பகுதியில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால், அணையின்நீர்மட்டம் 12 அடியிலிருந்து 23 அடியாக அதிகரித்தது. மேலும் ஒரு சில நாள்கள் தொடர்ந்து மழை பெய்தால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வன விலங்குகளுக்கும் போதிய தண்ணீர் கிடைக்கும் என வனத் துறையினர் தெரிவித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்