முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபி இயற்கை வேளாண்மை விழிப்புணர்வுக் கூட்டம்

வியாழக்கிழமை, 16 மார்ச் 2017      ஈரோடு

 கோபி இயற்கை வேளாண்மை விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோபி கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை விரிவாக்க மையம் சத்தியமங்கலம் அருகில் உள்ள எலத்தூர் செட்டிபாளையத்தில் இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தியது. முதல்வர் முனைவர் ஆர். செல்லப்பன் முன்னிலை வகிக்க வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் ஆர். செல்வராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் க.ரா. செல்வக்குமார் தலைமையுரையாற்றினார்.

          உலக மகளிர் உரிமைக் கழக உறுப்பினர் ஜி.ஜெயலட்சுமி கோவிந்தராஜ், எலத்தூர் செட்டிபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கொ. சந்திரசேகர் செயலாளர் மு. அய்யாச்சாமி, நம்பியூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ஆ. தங்கராஜன் ஆகியோர் பங்கேற்று உரை நிகழ்த்தினார்கள்.

          முனைவர் எம்.சுதாகர், முனைவர் என்.சக்திவேல், இணைப் பேராசிரியர்கள் முனைவர் ஆர். நாகராஜன், முனைவர் ஈ.பி. செங்கோட்டுவேல் முனைவர் யு. ஜெயப்பிராகாஷ், முனைவர் எம்.எஸ். மோகன்ராஜ், முனைவர் பி.செல்வகுமார் ஆகியோர் பங்கேற்று விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். இறுதியில் உதவிப் பேராசிரியர் சு. மோகன்ராஜ் நன்றி கூறினார்.

          கவுந்தப்பாடி ஜெயம் பிராணி நல அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர்.கே.வி. கோவிந்தராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார். விவசாயிகள் திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.

          டாக்டர் கே.வி. கோவிந்தராஜ் பேசும் பொழுது, “ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் அடிப்படை நாட்டம் கொண்டிருக்கின்ற காரணத்தால் இரசாயனக் கலப்பில்லாத இயற்கை விவசாய உற்பத்திப் பொருள்களைத் தயாரிக்கும் மாவட்டம் என்று அரசாங்கத்தால் அறிவிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. 75 சதவிகித விவசாயிகள் தற்போது பாரம்பாரியம், கலாச்சாரமிக்க இயற்கை விவசாயத்தினை செய்து வருகின்றனர். இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் காய்கறி பயிர்கள், தானியங்கள், கரும்புச் சர்க்கரை போன்றவைகளுக்கு உயர்ந்த விலை கிடைக்கின்ற காரணத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

          சனப்பை, தக்கைப்பூண்டு, கொழுஞ்சி, எருக்கன் இலை போன்ற பல தான்யப் பயிர்களை முதலில் விதைத்துவிட்டு 45 தினங்கள் கழித்து ஏர் உழுது மவித்துப் பண்படுத்தி 20,25 தினங்களுக்குப் பின்னர் நாம் விரும்பும் பயிர்களை நடலாம். இவ்வாறு செய்யும்பொழுது மண்ணின் தரம் உயர்கிறது. அதன்வழி உற்பத்தித் திறன் கூடுகிறது. மண்ணில் உள்ள விஷத்தன்மை நீங்குகிறது.

          டில்லியில் 1915ல் இந்திய தேசிய விவசாய ஆராய்ச்சிப் பண்ணையின் (ஐனெயைn யுபசiஉரடவரசந சுநளநயசஉh ஐளெவவைரவந) (ஐயுசுஐ) இயக்குனராகப் பணியேற்ற டாக்டர் ஆல்பர்ட் ஹோவார்டு என்பவர் மண்ணை வேகமாகவே மிதிக்கக் கூடாது என்றார். அதிகபாரம் கொண்டு மிதக்கப்படும் பொழுது நுண்ணுயிர்கள் சாகின்றன. கரும்பினை வெட்டிவிட்டு சோகைகளை காட்டிலே வைத்து தீ மூட்ட வேண்டாம். தீ மூட்டும் பொழுது மண்ணிலே உள்ள நுண்ணுயிர்கள் அடியோடு அழிந்து விடுகின்ற படியால் உற்பத்தித் திறன் பாதிக்கிறது. காட்டிலே பரப்பிவிட்டு மூடாக்கு போட்டு கரும்புக் கட்டைகளை முளைக்க விடலாம். கரும்புச் சோவை மேலேயே போடும் பொழுது களை முளைப்பதில்லை அத்துடன் ஈரப்பதம் காற்று சூரிய வெளிச்சம் பட்டு நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி உற்பத்தி திறனை பெருக்கித் தருகின்றது. இயற்கை விவசாயம் செய்து விவசாயிகள் செழிப்படைவதுடன், அதனை நுகரும் தனிமனிதனும் சுகாதாரத்தோடு வாழ்வான்” என்றார் டாக்டர் கே.வி. கோவிந்தராஜ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்