முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறிவியல் திறன் ஆராய்ச்சி போட்டி: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவி சாதனை

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அறிவியல்திறன் ஆராய்ச்சி போட்டியில் முதன்மை விருது பெற்று, அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவி சாதனை படைத்துள்ளார்.

நியூரான்கள் ஆராய்ச்சி
அமெரிக்க நாட்டில் நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வருபவர் இந்திராணி தாஸ் (வயது 17). இவர் இந்திய வம்சாவளி மாணவி ஆவார். 1இவர், மூளையில் காயம் ஏற்படுகிறபோது அல்லது நரம்புச்சிதைவு நோய் ஏற்படுகிறபோது நரம்பு செல்களான நியூரான்கள் செத்து விடாமல் தடுக்கும் சிகிச்சை குறித்து ஆராய்ச்சி நடத்தி சாதனை படைத்துள்ளார்.

முதன்மை பரிசு
இந்த சாதனைக்காக இந்திராணி தாசுக்கு பிரசித்தி பெற்ற ரீஜெனரான் அறிவியல்திறன் ஆராய்ச்சி போட்டியில் முதன்மை விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது 2½ லட்சம் டாலர் (சுமார் ரூ.1 கோடியே 67 லட்சத்து 50 ஆயிரம்) ரொக்க பரிசைக் கொண்டதாகும்.  மற்றொரு இந்திய வம்சாவளி மாணவரான இண்டியானாவை சேர்ந்த அர்ஜூன் ரமணி (18), இந்த போட்டியில் 3–வது பரிசை வென்றார். அவர் வரைபட கோட்பாட்டையும், கம்ப்யூட்டர் புரோகிராமிங்கையும் இணைத்து நெட்வொர்க் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்தியாவுக்கு பெருமை
இவர்களைப் போன்று இந்திய வம்சாவளி மாணவ, மாணவியரான அர்ச்சனா வர்மா, பிரதிக் நாயுடு, பிருந்தா மதன் உள்ளிட்டவர்களும் இந்த போட்டியில் பரிசுகளை தட்டிச்சென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்