வடகொரிய அதிபர் மோசமாக செயல்படுகிறார்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்கு

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      உலகம்
trump 2017 1 15

புளோரிடா  - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மிக மோசமாக செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டி ரம்ப் விமர்சித்துள்ளார். புளோரிடாவில் உள்ள டிரம்ப்பின் இல்லத்தில் வடகொரியாவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த டிர்ம்ப், வடகொரியாவின் சமீபத்திய அணுஆயுத நடவடிக்கை குறித்து பேசும்போது இவ்வாறு கூறினார். வட கொரியா அதிகம் வேகம் கொண்ட ராக்கெட் என்ஜின் சோதனையைக் கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கூறும்போது, "வடகொரியாவின் ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்த நிகழ்வு ஒரு வரலாற்று முக்கியதுவம் வாய்ந்தது" என்றார்.
முன்னதாக சீனா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்ற அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தொடர்ந்து, வடகொரியாவின் அணுஆயுத சோதனையை கடுமையாக விமர்சித்ததுடன், வடகொரியாவிடம் இனி பொறுமையை கடைபிடிக்கப் போவதில்லை என்று வெளிப்படையாக எச்சரித்தார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிர்ம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: