ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 13 பேர் வேட்புமனுத்தாக்கல்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      தமிழகம்
tn local election 2016 09 25

சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 13 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. வரும் 23-ம் தேதியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைகிறது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் தேமுதிக வேட்பாளர் மதிவாணன் உள்ளிட்ட 13 பேர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: