முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க அணிகளுக்கு புதிய பெயர் - சின்னம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி : "அ.தி.மு.க. அம்மா" சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு, "தொப்பி" சின்னம் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.  

ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள், 37 எம்.பி.க்கள் மற்றும் 95 சதவீதம் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளபோதிலும்,  எம்.ஜி.ஆரின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை முடக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம்  யாருக்கும் கிடையாது என்று அறிவித்த தேர்தல் கமிஷன் அதிமுக என்ற கட்சி பெயரையும் ,இருதரப்பினரும் பயன்படுத்தக் கூடாது என்றும்  உத்தரவிட்டது. இதனையடுத்து  27 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலைச் சின்னம்  தற்போது முடக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு முதல்முறையாக முடக்கப்படட் இரட்டை இலைச் சின்னம் தற்போது  ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் இரண்டாவது முறையாக முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தரப்பினரும் தங்கள் அணிக்கு புதிய பெயரை சூட்டியிருக்கிறார்கள்.  சசிகலா தரப்பினர் அ.தி.மு.க அம்மா என்றும், ஓபிஎஸ் தரப்பினர் அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.

தொப்பி சின்னம்  ஒதுக்கீடு

இந்நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க அம்மா என்ற பெயரில் சசிகலா  ஆசியோடு  டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  ஒபிஎஸ் அணிக்கு இரட்டை மின்கம்ப விளக்குச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தம்பித்துரை பேட்டி

இந்நிலையில் தொப்பி சின்னம் ஒதுக்கியிருப்பது தேர்தல் ஆணையத்தின் இடைக்கால ஏற்பாடுதான் எனக் குறிப்பிட்ட கட்சியின்  கொள்கை பரப்புச் செயலாளர் டாக்டர் மு. தம்பிதுரை,  அ.தி.மு.க. அம்மா சார்பில் போட்டியிடும் தினகரன், அமோக வெற்றிபெறுவார் எனத் தெரிவித்தார். அம்மா பல சோதனைகளை கடந்து இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுத்ததைப் போல் தற்போதும் இரட்டை இலைச் சின்னம் மீட்கப்படும் என்றும் டாக்டர் மு. தம்பிதுரை தெரிவித்தார்.

டிடிவி தினகரன் மனுத்தாக்கல்

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அம்மா சார்பில் போட்டியிடும்  வேட்பாளர்  டிடிவி தினகரன்  நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் .அ.தி.மு.க. அம்மா சார்பில் போட்டியிடும்   வேட்பாளர்  டிடிவி தினகரன் நேற்று தமது வேட்பு மனுவைத் தேர்தல் அதிகாரி  பிரவீன் நாயரிடம் தாக்கல் செய்தார். முன்னதாக வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்றபோது, டிடிவி தினகரனுக்கு வழிநெடுகிலும் கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்