முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டு இன்னும் 7 மாதத்தில் பேப்பர் இல்லாமல் செயல்படும்: தலைமை நீதிபதி ஜே.எஸ்.ஹேகர் தகவல்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, சுப்ரீம்கோர்ட்டு இன்னும் 6 அல்லது 7 மாதங்களில் பேப்பர் இல்லாமல் செயல்படும் என்று தலைமை நீதிபதி ஜே.எஸ். ஹேகர் தெரிவித்துள்ளார்.

மூத்த வழக்கறிஞருக்கான விதிமுறைகளை ஒரே விதமாக இருக்கும்படி வகுக்கக்கோரி பொதுநல வழக்கு ஒன்றை மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் என்பவர் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். இந்தமனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஜே.எஸ். ஹேகர், சுப்ரீம்கோர்ட்டு இன்னும் 6 அல்லது 7 மாதங்களில் பேப்பர் இல்லாமல் செயல்படும் என்றார். அதாவது எல்லாம் இனிமேல் இணையதளமாக்கப்படும் (டிஜிட்டல்) என்றார். இன்னும் 6 அல்லது 7 மாதத்திற்கு பிறகு நீங்கள் பேப்பர் எதுவும் தாக்கல் செய்ய வேண்டியிருக்காது என்றும் அவர் தெரிவித்தார். விசாரணை கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு ஆவனங்களை எலக்ட்ரானிக் மூலம் பதிவு செய்துகொள்வோம். சுப்ரீம்கோர்ட்டில் புதியதாக ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியிருக்காது என்று தலைமை நீதிபதி ஜே.எஸ்.ஹேகர் மற்றும் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதை தெரிவித்தது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் உள்ள வழக்குகள் சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் மையமாக்கும் முறையை சுப்ரீம்கோர்ட்டு கொண்டுவருவதால் ஆவணங்கள் மற்றும் புத்தக பேப்பர் மூலம் தாக்கல் செய்யப்படுவது நிறுத்தப்படும் என்றும் தலைமை நீதிபதி ஜெ.எஸ். ஹேகர் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்