முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக உள்ளோம் : பாகிஸ்தான் ஜனாதிபதி பேச்சு

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  - இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்னையில் தீர்வு காண தயாராக உள்ளோம் என பாகிஸ்தான் ஜனாதிபதி மமூன் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

தேசிய தினம்
பாகிஸ்தான் தேசிய தினம் அந்நாட்டில் நேற்று முன்தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அந்நாட்டு குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தை
இந்நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் ஜனாதிபதி மமூன் ஹூசைன் ,''ஐ.நா. தீர்மானத்தின் படி இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்னையில் தீர்வு காண தயாராக உள்ளோம். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்க பாகிஸ்தான் தொடர்ந்து துணை நிற்கும்.காஷ்மீர் பிரச்னையில் அமைதி ஏற்படுத்த உலக நாடுகள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும்.

குற்றச்சாட்டு
பாகிஸ்தான் பல ஆண்டுகளாக தீவிரவாதத்துக்கு எதிராக போரிட்டு வருகிறது. பாகிஸ்தான் மக்கள் தற்போது முன்பைவிட பாதுகாப்பாக உள்ளனர். இதற்காக பாதுகாப்புப் படைகள் தியாகங்களை செய்துள்ளன" என்று கூறினார். மேலும், இந்திய ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்