சட்ட அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      கடலூர்
Mar 24-h

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 23.03.2017 அன்று கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் சட்ட அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்டத்தில் தேங்கியிருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்கவும், இது தொடர்பாக அரசு வழக்கறிஞர்களுக்கு ஒத்துழைப்பினை நல்கிடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, கலெக்டர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெ.சண்முகம், கலெக்டர் அவர்களின் நேர்முக உதவியாளர் (சட்டப்பணிகள்) ஷீலா ராணி, மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜி.சந்திரசேகரன், மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் பி.ரவீந்திரன் உள்ளிட்ட அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: