முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறுகிய மனப்பாண்மையால் பல்கலைக்கழக சுதந்திரத்திற்கு சவால் ஏற்பட்டுள்ளது: துணைஜனாதிபதி ஹமீத் அன்சாரி வேதனை

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

சண்டிகர், குறுகிய மனப்பாண்மையால் பல்கலைக்கழகங்களின் சுதந்திரமான செயல்பாட்டிற்கு சவால் ஏற்பட்டுள்ளது என்று துணைஜனாதிபதி ஹமீத் அன்சாரி வேதனையுடன் தெரிவித்தார்.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் 65-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு ஹமீத் அன்சாரி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் பல்கலைக்கழகங்களின் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு சவால் ஏற்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல்படும் இடமாக இருப்பதோடு சுதந்திரமான கருத்துக்களையும் சமத்துவத்தையும் உருவாக்கும் மையமாகவும் இருக்க வேண்டும்.

சமீபத்தில் பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வரும் சம்பவங்களை பார்க்கும்போது பல்கலைக்கழகங்கள் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்கக்கூடாது என்பதில் குழப்பமானநிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் நன்மைக்காக பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிற்கு சவால்கள் ஏற்பட்டுள்ளது. கருத்து வேறுபாடுகளும் போராட்டங்களும் நமது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையாக இருக்கிறது. அதேசமயத்தில் குறுகிய நோக்கங்கள், கருத்துக்கள் மற்றும் மதகோட்பாடுகளுக்கு எதிராக இருக்கிறது.
 சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க பல்கலைக்கழகங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அறிவுப்பூர்வ வளர்ச்சியின் இருப்பிடமாக பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும் என்றார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் குறித்து ஹமீத் அன்சாரி மறைமுகமாக சாடினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்