முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும்: வானிலை மையம் தகவல்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.

ஏப்ரல் மாதம் தொடங்கும் முன்பாகவே தமிழகத்தில் 3 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 101.84 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று, முன் தீனம் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் 101.84 டிகிரி வெயில் பதிவானது. சேலத்தில் 100.58 டிகிரி வெயிலும், வேலூரில் 100.04 டிகிரி வெயிலும் சுட்டெரித்தது. மற்ற மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் குறைவாகத்தான் இருந்தது.சென்னை நுங்கம்பாக்கத்தில் 92 டிகிரியும், சென்னை விமான நிலையத்தில் 93 டிகிரி வெயிலும் அடித்தது.

கொடைக்கானலில் 67 டிகிரியும், ஊட்டியில் 74 டிகிரியும் வெயில் பதிவானது. இதனால் ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் அக்னி நட்சத்திர காலத்திலும் வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க தமிழகம் முழுவதும் மின் தேவையும் அதிகரித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்