முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச பூமி தினம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் கடைப்பிடிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சர்வதேச பூமி தினத்தையொட்டி, ரஷ்யா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தலைநகர் டெல்லியிலும், இந்நாளையொட்டி குடியரசுத்தலைவர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

உலக வெப்பமயம் ..

உலக வெப்பமயம் பிரச்னையால் நாம் வாழும் பூமி தற்போது நாளுக்குநாள் சூடாகிவிடுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகளை தடுக்கும் வகையிலும், வெப்பமயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 25-ம் தேதி, சர்வதேச பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் அரசுக் கட்டடங்கள், குடியரசுத் தலைவர் மாளிகை உள்ளிட்டவற்றில் நேற்றிரவு மின் விளக்குகள் சிறிது நேரம் அணைக்கப்பட்டன. மகாராஷ்ட்ரா, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் முக்கிய கட்டடங்கள், வணிக வளாகங்களில் விளக்குகள் அணைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஈஃபிள் கோபுரத்தில் விளக்குகள் அணைப்பு

பிரான்சில் அமைந்திருக்கும் உலகின் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தில் அலங்கார மின் விளக்குகள் அணைக்கப்பட்ட காட்சியை சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏராளமானோர் நேரில் பார்வையிட்டனர்.
செஞ்சதுக்கம் மற்றும் கிரம்ளின்..

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற செஞ்சதுக்கம் மற்றும் கிரம்ளின் பகுதிகளில், காலநிலை மாற்றத்தை உணர்த்தும் வகையில், ஒரு மணிநேரம் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. சுற்றுச்சூழல் மற்றும் உலக நிதியம் அமைப்பின் ஆதரவாளர்கள், மெழுகுவர்த்தி ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பூமி தினத்திற்கு ஆதரவு தெரிவித்து, துபாயின் அடையாளச் சின்னமாகவும், உலகிலேயே மிக உயரமானதாகவும் திகழும் பர்ச் கலிபா கட்டடத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு, மின்சார சிக்கனத்தை வலியுறுத்தினர்.

இதேபோல், உலகின் மற்ற பகுதிகளிலும் சர்வதேச பூமி தினத்தையொட்டி இன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்