முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியை பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது : பிரிட்டன் பாராளுமன்றத்தில் தீர்மானம்

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

லண்டன்  - கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியை பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக பிரிட்டன் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானம் தாக்கல்
மார்ச் 23-ம் தேதி பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை கனசர்வேடிவ் கட்சியைச்சேர்ந்த பாப்பிளாக்மேன் தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தில், ” ஏற்கனவே சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கும் இடத்தை இணைத்துக்கொள்ள பாகிஸ்தான் முயற்சிக்கிறது.கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதி சட்டப்பூர்வமாகவும் அரசியல் அமைப்பு சாசனத்தின்படியும் ஜம்மு காஷ்மீரின் ஒரு அங்கமாகும். இந்த பகுதியை 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துவிட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுய நிர்ணைய உரிமையும்  பேச்சு சுதந்திரமும் மறுக்கப்படுகிறது” என்று கண்டன தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக். நடவடிக்கை
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள கில்ஜித் பல்டிஸ்தான் பகுதிக்கு தனி மாகாண அந்தஸ்து வழங்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா, பஞ்சாப், சிந்து என பாகிஸ்தானில் 4 மாகாணங்கள் உள்ளன. இந்நிலையில் 5-வது மாகாணமாக கில்ஜித் பல்டிஸ்தான் பகுதியை உருவாக்க பாகிஸ்தான் திட்டமிட்டது. பல கோடி  அமெரிக்க டாலர்  மதிப்பிலான சீனா -பாகிஸ்தான் பொருளாதார கட்டமைப்பு பணிகள் நடைபெறுவதற்கு வசதியாக பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்ததாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்