முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை யுவபாரதி பள்ளி மாணவிக்கு விருது

புதன்கிழமை, 29 மார்ச் 2017      கோவை
Image Unavailable

கோவையை சேர்ந்த தர்ஷினி என்கிற இளம் ஸ்கேட்டிங் சாம்பியனுக்கு நட்சத்திர விருது வழங்கும் விழாவில் விளையாட்டு பிரிவில் மிகவும் மதிப்புமிக்க விருதான “பிரைட் ஆப் தமிழ்நாடு விருது” வழங்கப்பட்டது. இந்த விருது, தர்ஷினிக்கு அவரது சாதனைகள் மற்றும் விளையாட்டு துறையில் பங்களிப்பிற்காக வளர்ந்து வரும் பிரிவில் குறிப்பிட்ட ஸ்கேட்டிங் விளையாட்டிற்காக வழங்கப்பட்டது.

ரவுண்ட் டேபில் என்கிற அமைப்பு சார்பில் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் திறமைகளை அடையாளம் காண, அங்கீகரிக்க மற்றும் கொண்டாடுவதற்கான ஒரு முன்னெடுப்பாகும். ‘தமிழகத்தின் பிரைடு 2017’ என்ற விருது பல்வேறு துறைகளை சேர்ந்த பிரமுகர்கள் தங்களை செதுக்குவதற்காக சந்தித்த கஷ்டங்களை மற்றும் சவால்களை அங்கீகரிக்கவும், மற்றும் அடுத்த தலை முறையினரை ஊக்குவிக்கவும் வழங்கப்படுகிறது.

தமிழகத்தின் பிரைட் என்கிற விருதை பெற்று கொண்ட மாணவி தர்ஷினி பேசுகையில், “நான் கோவை யுவ பாரதி பள்ளியில் 2 ம் வகுப்பில் படிக்கிறேன். இது எனக்கு ஒரு பெருமையான தருணம் மற்றும் நான் இந்த சந்தர்ப்பத்தில் இங்கே இருப்பதில் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். என் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரின் வலுவான ஆதரவு இல்லாமல், நான் என் ஸ்கேட்டிங் போட்டிகளில் இந்த குறிப்பிடத்தக்க அங்கீகாரம் அடைய முடிந்திருக்காது. எல்லோருடைய ஆசீர்வாதத்தின் மூலம் நான் எனது வாழ்க்கையில் புதிய மற்றும் பெரிய உயரங்களை அடைவேன் - என்று கூறினார்.

தர்ஷினியின் பெருமைக் குரிய தந்தை மற்றும் தாய் திரு.கமலா கண்ணன் மற்றும் திருமதி.உமா மகேஸ்வரி ஆகியோர் தங்களது மகளின் சாதனைக்கு வழி வகுத்த வழிகாட்டிகளுக்கும், யுவபாரதி பள்ளியின் தலைவர் மற்றும் இந்த விருது அமைப்பாளர்களுக்கும் நன்றி கூறினர்.

தர்ஷினி கோயம்புத்தூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2014 ல் நடைபெற்ற போது 150 மீ மற்றும் 500 மீ தங்கபதக்கம் வென்றார். மேலும் 2014ல்  தமிழ்நாடு மாநில ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப்பில் பங்கேற்றார். 2015ல் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கமும், புதுச்சேரியில் நடந்த இரண்டாம் தென் மண்டல ஓபன் மாநிலரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் 150அ மற்றும் 500அ பிரிவுகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், 6 வது மேற்கு மண்டல ஓபன் மாநிலரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கபதக்கமும் பெற்றுள்ளார். சென்னையில் நடந்த போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களும், நாமக்கலில் நடைபெற்ற தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க போட்டிகளில் இரண்டு தங்கப்பதக்கங்களும், 2014 ல் கோவை மாவட்ட அளவிலான போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களும், சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களும் பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்