முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் சீமைக்கருவேல மரங்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்.

திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் புதிய பேருந்து நிலையம்  அருகில்  சீமைக்கருவேல மரங்கள் ஒழிப்பது  தொடர்பாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர்  ச.ஜெயந்தி     கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில்  பங்கேற்றார்.

                   திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரி, கண்மாய் போன்ற நீர்நிலைகளிலும், விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள் மற்றும் விவசாயப் பயன்பாட்டில் அல்லாத பிற நிலங்கள் மற்றும் பொது இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் நீர் நிலைகள் மற்றும் நிலம் சார்ந்த இடங்கள் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் மாசுபட்டு பொது மக்களுக்கும் இயற்கைக்கும் பெரிதும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக சீமைக் கருவேல மரங்களை அகற்றி சுத்தம் செய்து விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.  எனவே அனைத்து இடங்களிலும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றிட மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் (மதுரை கிளை) உத்திரவிட்டுள்ளது.

              இதனைத்தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. மேலும் அரசுக்கு சொந்தமான இடங்களில் சீமைக் கருவேல மரங்கள்  அகற்றும் பணியினை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், பொதுமக்கள் இணைந்து தங்களுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அரசுத்துறை நிறுவனங்கள், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்

      ஆகியவை பொதுமக்களுக்கு சீமைக்கருவேல மரங்களினால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் விரிவான பிரச்சாரங்கள் அனைத்து ஊராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சீமைக்கருவேல மரங்கள் அழிக்கும் பணி நமது மாவட்டத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது.

             இதனைத் தொடர்ந்து, அவிநாசியில் குளம் காக்கும் இயக்கம் சார்பில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் சீமைக் கருவேல மரங்களை அழிப்பது தொடர்பாக  பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர்  கொடியசைத்து துவங்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்.  இப்பேரணியில் திருப்பூர் சிக்கண்ணா அரசு மற்றும் கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவ, மாணவியர்கள் மற்றும் அவிநாசி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர். இப்பேரணியானது அவிநாசி புதிய பேருந்து நிலையம் தொடங்கி பழைய பேருந்து மற்றும் மங்கலம் சாலை வழியாக தாமரை குளத்தினை  வந்தடைந்தது.

            இப்பேரணியில் சிதம்பரசாமி  இ.கா.ப (ஓய்வு), திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜாசண்முகம், ராம்ராஜ் காட்டன்  உரிமையாளர் நாகராஜ், மெஜஸ்டிக்  கந்தசாமி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்