முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக சோஹைல் மகமூத் விரைவில் நியமனம்

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லமபாத்  - இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக சோஹைல் மகமூத்தை நியமிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

புதிய தூதர்
பாகிஸ்தானுக்கான இந்தியா தூதராக இருந்து வரும் அப்துல் பாஷித் தனது 3 ஆண்டு கால பணியை நிறைவு செய்துள்ளதையடுத்து புதிய  தூதரை நியமிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  தற்போது துருக்கி தூதராக உள்ள  சோஹைல் மகமூத், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு
இதற்காக இஸ்லமாபத்திற்கு அடுத்த வாரம் மகமூத் வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஒப்புதலை பெற்ற பின்னர், இதற்கான முறையான  அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. மேற்கூறப்பட்ட திட்டத்தின் படி அனைத்தும் நடைபெற்றால் அடுத்த மாதம் துவக்கத்தில் மகமூத் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக பொறுப்பேற்பார்.

அப்துல் பாஷித்...
அதேபோல், தற்போது தென் கொரியாவுக்கான பாகிஸ்தான் தூதராக உள்ள ஜாவீத் நசாருல்லா, ஆப்கானிஸ்தான் தூதராக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  தற்போது இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக இருக்கும் அப்துல் பாஷித், பாகிஸ்தானின் வெளியுறவு சேவை அகடமியின் தலைவராக  நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

நீண்ட விடுப்பில் ...
முன்னதாக, தன்னைவிட பணியில் ஜூனியரான தெஹ்மினா ஜனுஜா வெளியுறவு துறை செயலராக நியமிக்கப்படவுள்ளார் என்று வெளியான தகவலால் கடும் அதிருப்தி அடைந்த அப்துல் பாஷித் பணியில் இருந்து விலகப்போவதாக மிரட்டி இருந்தார். ஆனால், அப்துல் பாஷித் பிறகு சமரசம் ஆனார்.  டெல்லியில் இருந்து தன்னை திரும்ப அழைத்தவுடன் அப்துல் பாஷித் நீண்ட விடுப்பில் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு சேவை அகடமியின் தலைவராக பதவியேற்க உள்ளார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்