முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ.5.28 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி, வழங்கினார்.

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும்  நாள்  கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ.5.28 இலட்சம்  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  மாவட்ட  கலெக்டர்  ச.ஜெயந்தி, வழங்கினார்.

இக்கூட்டத்தில்,  பொது மக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும்  முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலைவசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழங்கப்பட்ட 310 மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட  கலெக்டர்   அதன் மீது உரிய நடவடிக்கையினை,  உடனடியாக  மேற்கொள்ள  தொடர்புடையத் துறை  அலுவலர்களுக்கு  அறிவுறுத்தினார்கள்.

மேலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்தில் உயிரிழந்தவரின்                                     1 குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விபத்து நிவாரண நிதியாக ரூ.3,00,000/- த்திற்கான காசோலையினையும், திருப்பூர் வடக்கு சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 19 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000/- வீதம் ரூ.2,28,000/- மதிப்பில் மாதாந்திர முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை பெறுவதற்கான ஆணையினையும் மற்றும்   சமூக பாதுகாப்பு திட்ட ஒதுக்கீட்டின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் செயல்படும் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர்களுக்கு தலா ரூ.50,000/- மதிப்பில் ரூ.4,50,000/- மதிப்பீட்டிலான கணினி உபகரணங்களையும்  மாவட்ட கலெக்டர்  வழங்கினார்கள்.

முன்னதாக, முன்னாள் படைவீரர் நலத்தறையின் சார்பில், 2015 ஆம் ஆண்டிற்கான படைவீரர் கொடி நாள் (07.12.2015 முதல் 06.12.2016 வரை) நிதி வசூலில் ரூ.1 கோடிக்கு மேல் 200 விழுக்காட்டிற்கும் அதிகமாக மாநில அளவில் ரூ.1,32,09,119/- நிதி வசூல் செய்தமைக்காக 120 கிராம் எடை உள்ள சிறப்பு வெள்ளி கேடயம் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் 2014 படைவீரர் கொடி நாள் நிதி வசூலில் அதிக வசூல் புரிந்தமைக்காக 9 அலுவலர்களுக்கு வெள்ளி பதக்கம் மற்றும்  ஆளுநர்/ தலைமைச்செயலாளரின் பாராட்டுச் சான்றுகளையும் மாவட்ட கலெக்டர்  வழங்கினார்கள். 

 இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துனை கலெக்டர் சுகவனம், முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் சந்திரசேகர், தனித்துணை கலெக்டர்கள்  உள்ளிட்ட அனைத்து  அரசுத்துறைகளின் அலுவலர்கள்  பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்